நள்ளிரவில் வெளியாகும் சிங்கம் – 3 படத்தின் தலைப்பு

சூர்யா – ஹரி கூட்டணியில் வெளிவந்த ‘சிங்கம்’ படத்தின் பெரிய வெற்றியைத் தொடர்ந்து, அதன் இரண்டாம் பாகம் ‘சிங்கம்-2’ வெளிவந்தது, இந்த படமும் பெரிய வெற்றியடையவே, இப்படத்தின் மூன்றாம் பாகத்தையும் எடுக்க ஹரி மற்றும் சூர்யா இருவரும் ஆர்வமடைந்தனர்.

இந்நிலையில், இப்படத்தின் மூன்றாம் பாகத்தில் நடிக்கும் நடிகர், நடிகையர் தேர்வு நடைபெற்று வந்தது. அந்த வரிசையில், முந்தைய இரண்டு பாகங்களிலும் நடித்த அனுஷ்கா ஒரு ஹீரோயினாகவும், மற்றொரு ஹீரோயினாக ஸ்ருதிஹாசன் நடிக்கப்போவதாகவும் செய்திகள் வெளிவந்தது.

இந்நிலையில், இப்படத்திற்கு என்ன தலைப்பு வைக்கலாம் என படக்குழுவினர் பரிசீலித்து வந்த நிலையில், தற்போது இந்த படத்தின் தலைப்பை உறுதி செய்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

புதிய தலைப்புடன் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் இன்று நள்ளிரவு வெளியிடப்போவதாக அறிவித்துள்ளனர். முந்தைய இரண்டு பாகங்களின் தலைப்பிலும் இடம்பெற்ற ‘சிங்கம்’ என்ற தலைப்பே இதிலும் வைப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Comments

comments

More Cinema News: