fbpx
Connect with us

போராடி ‘யு’ சான்று பெற்றது சிங்கம்-3: ரிலீஸ் தேதி அறிவுப்பு

News | செய்திகள்

போராடி ‘யு’ சான்று பெற்றது சிங்கம்-3: ரிலீஸ் தேதி அறிவுப்பு

வெற்றிக்கூட்டணியான சூர்யா – ஹரி கூட்டணியில் சிங்கம் படத்தின் மூன்றாம் பாகம் ‛எஸ்-3′ என்ற பெயரில் உருவாகி உள்ளது. சூர்யாவுடன் அனுஷ்கா, ஸ்ருதிஹாசன் ஹீரோயின்களாக நடிக்க ஹாரீஸ் ஜெயராஜ் இசையமைத்திருக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து ரிலீஸ் தேதி எல்லாம் அறிவிக்கப்பட்டது. ஆனால் படத்தின் ரிலீஸ் தேதி தள்ளி கொண்டே போனது. சுமார் மூன்று முறை ரிலீஸ் தேதி தள்ளிபோய் உள்ளது.

இதனிடையே ‘சிங்கம் 3′ படத்தில் அதிகப்படியான வன்முறை காட்சிகள் இருப்பதால் சிலகாட்சிகளை நீக்கினால் யு சான்று தருவோம் என்று சென்சார் போர்டு கூறியது. ஆனால், படக்குழு மறுக்கவே யு/ஏ சான்று அளித்தனர். யு சான்று கிடைத்தால் தான் தமிழக அரசின் வரி சலுகை பெற முடியும். இதனால் சிங்கம் 3 படக்குழு ரீ-வைசிங் கமிட்டி செல்ல முடிவு செய்தது. அங்கு ஒருவழியாக போராடி படத்திற்கு யு சான்று பெற்றுவிட்டனர். இதையடுத்து சிங்கம் 3 படக்குழு உற்சாகமாகியுள்ளது. யு சான்று கிடைத்த மகிழ்ச்சியோடு ரிலீஸ்க்கான வேலையை படக்குழு ஆரம்பித்துள்ளது. வருகிற ஜன., 26-ம் தேதி ‛சிங்கம்-3’ உலகம் முழுக்க ரிலீஸாகிறது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top