ஹரி இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் ‘S3’ படத்தின் படப்பிடிப்புகள் நடந்து வரும் நிலையில் சூர்யா ஓய்வு எடுப்பதற்காக வெளிநாடு சென்றதால் தற்காலிக பிரேக் ஏற்பட்டது என்பது தெரிந்ததே. ஆனால் இந்த பிரேக்கில் படப்பிடிப்புகள்தான் நடைபெறவில்லையே தவிர முதல் பாதியின் போஸ்ட் புரடொக்ஷன்ஸ் பணிகள் நடைபெற்று வந்ததாகவும் கிட்டத்தட்ட முதல் பாதியின் பணிகள் முற்றிலும் முடிந்துவிட்டதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது.

இந்நிலையில் வரும் 8ஆம் தேதி முதல் விசாகப்பட்டிணத்தில் மீண்டும் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கவுள்ளது. விசாகப்பட்டிணம் படபிடிப்பு முடிந்த பின்னர் சென்னை, மலேசியா மீண்டும் சென்னையில் படப்பிடிப்பு நடைபெறவுள்ளதாகவும் இந்த படத்தை வரும் ஆயுத பூஜை அல்லது தீபாவளி திருநாளில் வெளியிட திட்டமிட்டுள்ளதகவும் கூறப்படுகிறது.