Tamil Cinema News | சினிமா செய்திகள்
சால்ட் அண்ட் பெப்பர் ஹேர் ஸ்டைலில் வயதான தோற்றத்தில் சிம்ரன்.. நியூ லுக்கால் நொறுங்கிப் போன ரசிகர்கள்!
2000 ஆண்டுகளில் கோலிவுட்டின் முன்னணி நடிகையாக விளங்கியவர் தான் நடிகை சிம்ரன். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி, கன்னடம் ஆகிய மொழிகளில் கதாநாயகியாக பணியாற்றியிருக்கிறார்.
மேலும் 2000ஆம் ஆண்டுகளின் கனவுக்கன்னி என்றால் எல்லோருக்கும் நினைவில் வருவது சிம்ரன் தான். ஏனென்றால் இவரது இடுப்பு மடிப்பில் பலர் சொக்கி கிடந்தனர். அதுமட்டுமில்லாமல் அந்தக் காலத்தில் இவரது புன்னகைக்கும், நடனத்திற்கும் மட்டுமே தனியாக ஒரு ரசிகர் பட்டாளமே உண்டாம்.
அதோடு சிம்ரன் தனது சிறுவயது நண்பரான தீபக் பகா என்பவரை திருமணம் செய்து கொண்டார். அதற்குப் பிறகு சினிமாவில் இருந்து சிறிது காலம் பிரேக் எடுத்துக் கொண்டதோடு, தற்போது ரீஎன்ட்ரி ஆகி சில படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார்.
இந்த நிலையில் தற்போது சிம்ரன் தனது சோசியல் மீடியா பக்கத்தில் வெளியிட்டிருக்கும் புகைப்படம் ஒன்று அவரது ரசிகர்களை நொறுங்கிப் போகச் செய்துள்ளது.அதாவது ‘சிம்ரன் என்றால் அழகு. அழகு என்றால் சிம்ரன்’ என்று வர்ணிக்கப்படும் அளவிற்கு வசீகரமாக இருந்தவர்தான் சிம்ரன்.
ஆனால் தற்போது இவர் வெளியிட்டிருக்கும் புகைப்படத்தில் சால்ட் அன்ட் பெப்பர் ஹேர் ஸ்டைலில் கிழவி போல தோற்றம் கொண்டிருக்கிறார். அதோடு கன்னத்தில் சுருக்கம் விழுந்து ஏதோ போல் உள்ளார் சிம்ரன்.

Simran
இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருவதோடு, பல சிம்ரன் ரசிகர்களின் இதயத்தை சுக்குநூறாக நொறுங்க வைத்துள்ளது.
