சாகப் போற நேரத்தில் சங்கரா போடும் சிம்ரன்.. கோவில்பட்டி வீரலட்சுமி விஜய்யை வைத்துப் போட்ட தப்பு கணக்கு

1996 இல் வி ஐ பி படம் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் சிம்ரன். அதனை தொடர்ந்து அம்மணிக்கு ஏறுமுகம் தான் தொடர்ந்து பத்து படங்களுக்கு மேல் சூப்பர் ஹிட் கொடுத்தார். பெரிய பெரிய ஹீரோக்கள் எல்லோரும் போட்டி போட்டு சிம்ரனை புக் பண்ண தொடங்கினார்கள்.

தொடர்ந்து 28 வருடங்கள் தமிழ் சினிமாவில் நடித்து வருகிறார். இப்பொழுது கூட தளபதி 69 மற்றும் குட் பேட் அக்லீ படத்தில் கமிட்டாகி நடித்து வருகிறார். ஹீரோயின்களுக்கு நிகராக சம்பளம் வாங்கி கொண்டிருக்கிறார். இதுவரை இவருடைய மார்க்கெட் டல் அடித்தது என்று கூறவே முடியாது.

கோவில்பட்டி வீரலட்சுமி விஜய்யை வைத்துப் போட்ட தப்பு கணக்கு

தெலுங்கு, தமிழ், மலையாளம் என தற்போதும் நடித்து வரும் சிம்ரனுக்கு இப்பொழுது விபரீத ஆசை ஒன்று வந்துள்ளது. சாகப்போற நேரத்தில் சங்கரா போடுவார்கள், அதைப்போல விஜய் சினிமா கேரியருக்கு கிட்டத்தட்ட எண்டு கார்டு போட்டு விட்டார். இப்பொழுது அவரிடம் போய் சிம்ரன், விஜய்யை வைத்து ஒரு படம் தயாரிக்க உத்தரவு கேட்டிருக்கிறார்.

தன்னை வைத்து படம் தயாரிக்க ஆசைப்பட்ட சிம்ரனுக்கு விஜய் மறுப்பு தெரிவித்துவிட்டார். தன்னுடைய படம் ரிலீஸ் ஆகும் சமயத்தில் எப்பொழுதுமே பிரச்சனை வரும். அந்த பிரச்சனையை சிம்ரனால் சமாளிக்க முடியாது என்று அவருக்கு அரை மணி நேரம் அறிவுரை கூறி அனுப்பி விட்டாராம்.

ஏற்கனவே விஜய் படங்கள் ரிலீஸ் ஆகும் சமயத்தில் பல பிரச்சனைகளை சந்தித்துள்ளது. விஜய்யை வைத்து படம் தயாரிக்க ஆசைப்படும் புது தயாரிப்பாளர்களுக்கு, விஜய் கூறும் பதில் இதுதானாம். இப்படித்தான் பல தயாரிப்பாளர்களை விஜய் நிராகரித்துள்ளார். “தெறி” படத்திற்கு கூட வந்த புது தயாரிப்பாளரை நீக்கிவிட்டு கலைப்புலி தாணுவை நியமித்துள்ளார்.

- Advertisement -spot_img

Trending News