Tamil Cinema News | சினிமா செய்திகள்
சிம்ரன் காட்டில் மழை.. பேட்ட படத்திற்கு பின் பிரபல நடிகருடன் இணைகிறார்

பேட்ட படத்திற்கு பின் மீண்டும் சிம்ரன்
பேட்ட படம் வெளிவந்த பின்னர் சிம்ரன் மார்கெட் ஏறிக்கொண்டே செல்கிறது. பேட்ட படத்தில் சில நேரங்களே வந்தாலும் அவருடைய கதாபாத்திரம் மிக நன்றாக இருந்தது. அடுத்த படத்திற்கு முன்னோட்டம் பார்ப்பது போலவே அவருடைய அழகும் ஆடையும் அமைந்தது.
அதுவும் ரஜினி ரொமான்ஸ் காட்சிகளில் ரஜினிக்கு சரியான ஜோடியாக இருந்தார். பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளிவந்த உடனே சிம்ரனை பார்த்து ஆச்சரியப்பட்டனர். இத்தனை நாள் நடிக்காமல் போய்விட்டாரே என்று ரசிகர்களும் ஏங்கினர்.
தற்பொழுது அடுத்து ஒரு ஜாக்பாட் அடித்துள்ளது. மாதவன் நடிப்பில் வெளிவர இருக்கும் நம்பி நாராயணன் படத்தில் அவருக்கு ஜோடியாக 17 வருடத்திற்கு பிறகு மீண்டும் நடிக்கிறார் நடிகை சிம்ரன். ஏற்கனவே நம்பி நாராயணன் படத்தின் கதை பிரச்சினைகள் நடந்து வருகிறது. அதற்கிடையில் தற்பொழுது சிம்ரன் நடிக்கிறார் என்ற இனிப்பான செய்தியும் வந்துள்ளது.
மாதவன் நம்பி நாராயணன் கதாபத்திரத்தில் நடிப்பதற்கு உண்மையான நம்பி நாராயணன் ஹேர் ஸ்டைல்,மேக்கப் என தன்னை மாற்றி வருகிறார் அவருக்கு ஜோடியாக சிம்ரன் நடிப்பதால் அவரும் வயதான அழகான நடிகையாக வருவார் என தோன்றுகிறது.
கூடுதலாக அனுஷ்காவும் தனது உடம்பை நம்பி நாராயணன் படத்திற்காக குறைத்து வருகிறார். அவரும் இந்த படத்தில் இணையப் போகிறார் என்று செய்திகள் வெளிவந்துள்ளது ஆனால் மாதவனுக்கு ஜோடியாக அல்லது வேறு கதாபாத்திரம் என்று போகப் போகத் தெரியும்.

Simran
