சிம்ரனின் இடுப்பழகில் மயங்கி கிடந்த 4 ஹீரோக்கள்.. திருமணம் வரை சென்று முறிந்துபோன பந்தம்

தமிழ் திரையுலகில் தன்னுடைய அற்புதமான நடிப்பாலும், நடன திறமையாலும் ரசிகர்களை கட்டிப்போட்டவர் நடிகை சிம்ரன். இடுப்பழகி என்று ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்படும் இவர் ரஜினி, கமல், விஜய், அஜித் போன்ற முன்னணி ஹீரோக்கள் பலருடனும் நடித்திருக்கிறார்.

சினிமாவில் மிகப்பெரிய உயரத்தில் இருந்த இவர் பல சர்ச்சைகளில் சிக்கி இருக்கிறார். அந்த வகையில் சிம்ரனுக்கு சில காதல் தோல்விகளும் இருக்கிறது. அப்படி சிம்ரன் காதலித்த நான்கு சினிமா ஹீரோக்களை பற்றி இங்கு காண்போம்.

ராஜூ சுந்தரம்: நடன இயக்குனர் சுந்தரம் மாஸ்டரின் மகனான இவரும் சினிமாவில் நடன இயக்குனராக இருந்து வருகிறார். அது மட்டுமல்லாமல் ஜீன்ஸ், உன்னாலே உன்னாலே உள்ளிட்ட பல திரைப்படங்களில் இவர் நடித்திருக்கிறார். அந்த வகையில் இவர் நடிகை சிம்ரனை தீவிரமாக காதலித்தார்.

அவர்கள் இருவரும் இணைந்து ஐ லவ் யூ டா என்ற திரைப்படத்திலும் ஜோடியாக நடித்தார்கள். ஆனால் இவர்களின் காதல் ராஜசுந்தரத்தின் அப்பாவுக்கு பிடிக்காத காரணத்தால் பாதியிலேயே முறிந்து போனது. திருமணத்திற்கு பிறகு சிம்ரன் நடிக்க கூடாது என்று கூறியதால் தான் இந்த காதல் முறிந்து போனதாகவும் ஒரு தகவல் உண்டு.

கமல்: உலக நாயகன் கமல் பல ஹீரோயின்களுடன் கிசுகிசுவில் சிக்கியிருக்கிறார். அந்த வகையில் சிம்ரனுக்கும் இவருக்கும் இடையே இருக்கும் உறவைப் பற்றி ஏகப்பட்ட வதந்திகள் பரவி வந்தது. பஞ்சதந்திரம், பம்மல் கே சம்பந்தம் உள்ளிட்ட திரைப்படங்களில் ஜோடியாக நடித்திருக்கும் இவர்கள் இருவரும் சில காலங்கள் காதலில் இருந்தனர்.

இளம் நாயகியை கமல் மறுமணம் செய்து கொள்ள போவதாக கூட அப்போது பல செய்திகள் வெளிவந்தது. ஆனால் அவர்கள் இருவரும் அந்த வதந்திகளுக்கு எந்தவிதமான பதிலும் அளிக்கவில்லை. அதன் பிறகு அவர்கள் இருவரும் இணைந்து நடிக்கவும் இல்லை.

அப்பாஸ்: சிம்ரன் நடிக்க வந்த ஆரம்ப காலகட்டத்தில் நடிகர் அப்பாஸுடன் இணைந்து பூச்சூடவா உள்ளிட்ட சில திரைப்படங்களில் இணைந்து நடித்துள்ளார். அப்போது இவர்கள் இருவரும் உருகி உருகி காதலித்ததாக கூறப்படுகிறது. ஆனால் சில வருடங்களுக்குப் பிறகு இவர்கள் பிரேக் அப் செய்து பிரிந்து விட்டனர்.

சரத்குமார்: நட்புக்காக, அரசு உள்ளிட்ட திரைப்படங்களில் இணைந்து நடித்திருக்கும் இவர்கள் இருவரும் நட்பை தாண்டிய ஒரு உறவில் இருந்தனர். ஆனாலும் சிம்ரன் அதை நீடிக்காமல் பாதியிலேயே முறித்துக் கொண்டார். இப்படி அவருக்கு சில காதல் தோல்விகளும் சினிமாவில் இருந்துள்ளது.

மேலும் ஏதாவது ஒரு நடிகரை தான் அவர் திருமணம் செய்து கொள்வார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சிம்ரன் தன்னுடைய சிறு வயது நண்பரை திருமணம் செய்து கொண்டார். தற்போது அவர்களுக்கு இரண்டு குழந்தைகள் இருப்பது குறிப்பிடத்தக்கது.

Next Story

- Advertisement -