Tamil Cinema News | சினிமா செய்திகள்
சூப்பர்ஸ்டார் – கார்த்திக் சுப்புராஜ் படத்தில் இணைந்த இரண்டு பிரபலங்கள் ! அடிடா விசில்ல ! போடுடா வெடியை !
சன் பிக்சர்ஸ்
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் நடிக்கும் படத்தை சன் பிக்சர்ஸ் தயாரித்து வருகின்றது. அனிருத்தின் இசையில், திருவின் ஒளிப்பதிவில் இப்படத்தின் முதல் கட்ட ஷூட்டிங் டார்ஜிலிங் பகுதியில் 37 நாட்கள் நடைபெற்றது.

SUN PICTURES
மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இப்படத்தில் ரஜினிக்கு சமமான ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார். ரஜினிக்கு மகன்களாக பாபி சிம்ஹா மற்றும் சனத் ரெட்டி இருவரும் நடிக்கவுள்ளனர். சனத் ரெட்டிக்கு ஜோடியாக மேகா ஆகாஷ் நடிக்கிறார் போன்ற தகவல்கள் முன்பே வெளியாகின.

Sun Pictures
இந்நிலையில் இப்படத்தில் சிம்ரன் மற்றும் பாலிவுட் நடிகர் நவாஸுதீன் சித்திக் இணைந்துள்ளதாக சன் பிக்ச்சர்ஸ் தங்கள் ட்விட்டர் பக்கத்தில் உறுதி செய்துள்ளார்கள்.
We are happy to announce that for the first time, @SimranbaggaOffc and @Nawazuddin_S will be acting with Superstar Rajini in #SuperstarWithSunPictures pic.twitter.com/LmsAHuqdWM
— Sun Pictures (@sunpictures) July 18, 2018
ஏற்கனவே காலா படத்தில் ஈஸ்வரி ராவ், மற்றும் நானா பட்டேக்கர் இணைந்து நடித்துள்ள நிலையில், தற்பொழுது இரு சீனியர் ஆர்ட்டிஸ்ட் இணைந்துள்ளது படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரிக்க செய்துள்ளது.
