Tamil Cinema News | சினிமா செய்திகள்
பழைய பன்னீர் செல்வமாக திரும்பிய சிம்ரன்.. கலக்கத்தில் நடிகைகள்!
பழைய பன்னீர் செல்வமாக திரும்பிய சிம்ரன்.. கலக்கத்தில் நடிகைகள்
சிம்ரன் பதிமூன்று வருடங்களுக்கு பின் தமிழ் சினிமாவில் மறுபடியும் நடித்துள்ளார். இவர் ஒரு காலத்தில் ரசிகர்களின் கனவு கன்னியாக இருந்தது அனைவரும் அறிந்ததே. அதுமட்டுமல்லாமல் அதே கட்டுக்கோப்பான அழகை இப்ப வரை கடைப்பிடித்து வருகிறார். தனது திருமண வாழ்க்கைக்குப் பின் இரண்டு குழந்தைகள் பிறந்தும் தமிழ் சினிமாவில் அவர் நடிப்பதற்கான காரணம் என்ன என்று பார்த்தால் ரசிகர்கள் தான் மேல் வைத்த எதிர்பார்ப்பு தானாம்.
சிம்ரன் பேட்ட படத்தை பற்றி அவரிடம் கேட்டதற்கு அவர் கூறியது என்னவென்றால் ‘சூப்பர் ஸ்டாருடன் நடித்தது மிகச் சிறந்த வாய்ப்பாகும், நான் சந்திரமுகியில் விட்டதை பேட்டயில் கண்டிப்பாக பிடித்து இருக்கிறேன் என்று கூறியுள்ளார். சிம்ரனுக்கு சந்திரமுகியில் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்து அவர் நடிக்க முடியாமல் போய்விட்டது.
இந்தப் படத்தில் அவர் டப்பிங் செய்துள்ளதாகவும் அதுதான் மிகச் சிறந்தது என்று அவர் கூறியுள்ளார். இளையதளபதி விஜய் அவர்களுடன் டான்ஸ் ஆடுவது எப்படிப்பட்ட அனுபவம் என்று கேட்டதற்கு அவர் உடன் ஆடும் போது கொஞ்சம் பெருசா தான் இருக்கும் ஆனாலும் அவருக்கு சமமாக மேனேஜ் பண்ணி நானும் ஆடுவேன் என்று கூறினார்.

simran-poster
இளையதளபதி விஜய் டான்ஸ் என்றாலே பட்டையை கிளப்புவார் என்று அனைவருக்கும் தெரிந்ததே சில வருடங்களுக்கு முன்பு அவருக்கு நிகராக டான்ஸ் ஆடும் ஒரே நடிகை சிம்ரன் மட்டுமே இதனை விஜய் அவர்களை கூறியுள்ளார். மீண்டும் தமிழ் சினிமாவில் என்ட்ரி ஆகியிருக்கும் தலைவி சிம்ரனுக்கு சினிமாபேட்டையின் வாழ்த்துக்கள்.

simran-vijay
