விஜய் சேதுபதி. இன்று தமிழின் சூப்பர்ஸ்டார்களில் ஒருவர். ஆனால் தமிழ் சினிமாவில் ஒரு இடம் கிடைப்பதற்குள்  இவர் பட்ட பாடுகள்  கொஞ்சம் இல்லை. மிக மிக அதிகம்.

இளநிலை வணிகவியலில் பட்டம் பெற்று 3 ஆண்டுகள் துபாயில் கணக்காளராக பணி புரிந்தார். அவ்வேலை பிடிக்காததால் 2003ல் இந்தியாவுக்கு திரும்பிவிட்டார்.

நிழல்படக்காரர் ஒருவர் இவரின் முகம் நிழல்படங்களில் அழகாக தெரியக்கூடிய ஒன்று என்று சொன்னது இவர் நடிப்புத்துறையை தேர்ந்தெடுக்க உந்துதலாக இருந்தது என்று கூறியுள்ளார்.

சினிமா ஆசை வந்து சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்து அதன் பிறகே ஹீரோவானார். ஆனால் பொறுமையாக கற்றுக்  கொண்டே இருந்தார்.

அதிகம் படித்தவை:  தெறி அப்டேட்- விஜய்யை அசர வைத்த அட்லீ

அனைவரையும் மதித்தார். குறும்படங்கள் செய்யும் வாய்ப்பு கிடைத்தது. மறுக்காமல் ஒப்புக் கொண்டார். நல்ல நட்பு வட்டத்தை உருவாக்கினார்.

அந்த நட்பு வட்டம் தான் இந்த எளிமையான வாலிபனை ஹீரோ ஆக்கியது. கெட்டியாகப் பிடித்துக் கொண்டார். தனக்கென்று முற்றிலும் ஒரு புதிய பாணியை உருவாக்கினார்.

தொடர்ந்து வேதனைகளும்..சோதனைகளும். இதோ அனைத்தையும் கடந்து வந்து இன்று தனக்கென ஒரு நிலையான இடத்தைப் பிடித்து சாதனை ஆக்கிக்கொண்டார்.

விஜய்,அஜீத் போன்ற முன்னணி ஹீரோக்கள் வரிசையில் ஒரு இடம் கிடைத்தது. ஆனால் இவ்வளவு பெரிய இடம்  கிடைத்தும் கூட அதே பண்பு, எளிமை, பழைய காலத்து நண்பர்களைத் தேடிக் கண்டுபிடித்து போய் நட்பு பாராட்டுகிறார்.

அதிகம் படித்தவை:  விஜய் ரசிகர்களுக்கு ஏமாற்றத் தெரியாது! அசத்திய ரசிகர்கள்

இல்லாதவர்களுக்கு உதவிகள் செய்வதில் அஜீத்தைக் கடைப்பிடிக்கிறார். இவரிடம் பழகிய திரையுலக நண்பர்கள் இவர் கேமாரவிற்கு முன் வந்தால் நடிகர்.

வெளியே வந்து விட்டால் சிறந்த மனிதர்..சிறந்த நண்பர் என்கிறார்கள். புதிதாக திரைக்கு வரும் இளைஞர்களுக்கு இவர் ஒரு முன்னுதாரணம் என்கிறார்கள் வளர்ந்து வரும் நடிகர்கள் கூட.

வாழ்த்துகள் விஜய் சேதுபதி சார்..!