Connect with us
Cinemapettai

Cinemapettai

rajini-ajith

Entertainment | பொழுதுபோக்கு

‘தல-தலைவர்’: இருவரிடமும் உள்ள ஐந்து ஒற்றுமை இது தான்.

நம் கோலிவுட்டில், பெருமளவில் ரசிகர்களை கொண்டவர்கள் தலைவர் ரஜினிகாந்த், மற்றும் தல அஜித் குமார். இவர்கள் இருவருக்கும் இவ்வளவு ரசிகர்கள் இருப்பதற்கு முக்கிய காரணம் இவர்களுடைய  நடிப்பு என்றாலும், இவர்களின்  எளிமையான சுபாவமும்;  பிறருக்கு உதவும் குணாதிசயமும் அனைவராலும் ரசிக்கப்படும் விஷயமாகும். நடிகர் என்பதை விட நல்ல மனிதர் என்ற பெயர் எடுத்தவர்கள். இவர்களுக்குள் இருக்கும் சில ஒற்றுமைகள், உங்கள் பார்வைக்கு..

ரஜினி, அஜித் இருவருக்குமே திரையுலகில் பின்புலம் ஏதும் இல்லை. தானாக தங்கள் முயற்சி மற்றும் திறமையால் முன்னேறியவர்கள். நடுத்தர குடும்பத்தில் இருந்து வந்தவர்கள். தங்களுக்கான தனி பாணியின் மூலமாக இந்தியாவின் முன்னணி நட்ச்சத்திர அந்தஸ்து பெற்றவர்கள்.

பெரிய ரசிகர் பட்டாளத்தை வைத்துக் கொண்டு கோலிவுட்டை கலக்கும் இருவரும் பிறப்பால் தமிழர்கள் அல்ல. ரஜினி () சிவாஜி ராவ் மராத்தி குடும்பத்தை சேர்ந்தவர்.அஜித் செகந்திராபாத், பகுதியை சேர்ந்தவர்.

ajith-rajini

ajith-rajini

மற்ற நடிகர்கள் தங்கள் ரசிகர்கள் தங்கள் படத்தை கண்டு ஓடவைக்க வேண்டும் என எண்ணும் பொழுது.உங்கள் தனிப்பட்ட வாழ்க்கை முக்கியம்படத்தை சாதாரணமாக பாருங்கள், அதிக செலவழிக்க வேண்டாம் என நேரடியாக அறிவுறுத்தியவர்கள் இருவரும் ரசிகர்கள் மீது அதீத அன்பு கொண்டுள்ளவர்கள்.

பிறருக்கு உதவும் மனப்பான்மை கொண்டவர்கள் பல நேரங்களில் அதை வெளியில் காட்டிக் கொண்டதும் இல்லை. தங்கள் வீட்டில் பணிபுரியும் நபர்களில் இருந்து, அவர்களுக்கு தெரிந்தவர்கள், ரசிகர்கள் என்று பலருக்கு நிறைய உதவிகளை செய்பவர்கள்.

தங்களின் பர்சனல் வாழ்க்கை தனிப்பட்டது என்பதில் மிக கவனமாக இருந்தவர்கள். தங்கள் குடும்பத்துடன் நேரம் செலவழிப்பதிலும் கவனமாக இருப்பவர்கள். ரியல் லைப், ரீல் லைப் என இரண்டையும் பிரித்து வாழ்பவர்கள்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top