Tamil Cinema News | சினிமா செய்திகள்
தர்பார் பார்த்துவிட்டு அஜித் பட வேலைகளை வேகப்படுத்திய இயக்குனர் வினோத்.. ஏன் தெரியுமா
இது என்னடா தலைப்பில் குழப்புறீங்க என உங்களின் மைண்ட் வாய்ஸ் புரிகிறது. ஆனால் இதுதானுங்க நம் கோலிவுட் பட்சிகள் சொல்லும் லேட்டஸ்ட் கிசு கிசு.
தர்பார் – முருகதாஸ் இயக்கத்தில் ரஜனி நடிப்பில் வெளியாகி ஹிட் அடித்துள்ளது. ஆதித்யா அருணாச்சலமாக மும்பை கமிஷனராக ரஜினி அவர்கள் பெண்/ குழந்தைகள் கடத்தல், போதை மருந்து மாஃபியாவை அழிப்பது என அதகளப்படுத்தியிருந்தார். கூடவே மகள் செண்டிமெண்ட் என முழு பேக்கேஜ் இப்படம்.
இதில் வேடிக்கையான விஷயம் என்னவென்றால் தல அஜித்தின் வலிமை பட ஒன் லைன் கதையும் இது தானாம்- மும்பை பின்னணி போலீஸ், மகள் செண்டிமெண்ட், தாதாக்களை அழிப்பது. தர்பார் டீஸர் வந்ததில் இருந்தே பதட்டத்தில் தான் இருந்தாராம் நம் இயக்குனர் வினோத். அதான் தர்பார் பார்க்கும் வரை சில முக்கிய காட்சிகளை வலிமை படத்தில் படமாக்காமல் இருந்துள்ளாராம். தர்பார் பார்த்துவிட்டு கதைக்களம் தான் ஒற்றுமை கதை வெவ்வேறு என்பது தெளிவுபட ஹாப்பியாக அடுத்த கட்ட ஸ்டுல் செல்கிறாராம் தல அஜித்துடன்.
