fbpx
Connect with us

Cinemapettai

மதுரையில் மன்மதன் கெட்டப்பில் வந்து இறங்கிய சிம்பு.. மாஸ் காட்டும் லேட்டஸ்ட் புகைப்படம்

Tamil Cinema News | சினிமா செய்திகள்

மதுரையில் மன்மதன் கெட்டப்பில் வந்து இறங்கிய சிம்பு.. மாஸ் காட்டும் லேட்டஸ்ட் புகைப்படம்

தமிழ் சினிமாவில்  சிம்பு எனப்படும் சிலம்பரசன் தற்போது வரிசையாக பல படங்களில் கமிட்டாகி வருவது அனைவரும் அறிந்ததே.

இவர் வெங்கட் பிரபு இயக்கத்தில் சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் உருவாகவிருக்கும் ‘மாநாடு’ படத்தின் படப்பிடிப்பு வரும் நவம்பரில் இருந்து தொடங்கப்பட உள்ளது.

இதற்கிடையே சுசீந்திரன் இயக்கத்தில் கிராமத்து பின்னணி கதைக்களம் கொண்ட படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு திண்டுக்கல் மாவட்டத்தில் நடைபெற்று வருகிறது.

தற்போது சிம்பு திருப்பதி  ஏழுமலையானை தரிசிக்க  சென்ற போது தன்னுடைய கெட்டப் வெளியில் தெரியாதபடி முகத்தை மூடியபடி சென்றுள்ளார்.

அதுமட்டுமில்லாமல் சுசீந்திரன்- சிம்பு கூட்டணியில் உருவாகும் இந்த படத்தின் படப்பிடிப்பு  நடைபெறும் இடத்தில் கூட யாரும் மொபைல் போன் கொண்டு வரக்கூடாது என்ற கட்டுப்பாடுகளை விதித்து சிம்புவின் கெட்டப் வெளியில் தெரியாதபடி பார்த்துக்கொள்கிறார் சுசீந்திரன்.

அதற்கேற்றார் போலவே சிம்புவும் எங்கு சென்றாலும் முகத்தை மூடியபடி வலம் வருவது ரசிகர்களுக்கு இந்த படத்தின் எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது. 

 

simbu-cinemapettai

simbu-cinemapettai

Continue Reading
To Top