அனல் பறக்க கத்தி, துப்பாக்கி என வெறிபிடித்த சிம்புவின் புகைப்படங்கள்.. வைரலாகும் பத்து தல

சிம்பு மாநாடு படத்தின் மூலம் தனது செகண்ட் இன்னிங்ஸ் தொடங்கி உள்ளார். கடைசியாக அவரது நடிப்பில் வெளியான வெந்து தணிந்தது காடு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இப்போது எஸ் கிருஷ்ணா இயக்கத்தில் பத்து தல என்ற படத்தில் நடித்து வருகிறார்.

பத்து தல படத்திற்காக சிம்பு இருக்கும் கெட்டப் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்த படத்தில் பிரியா பவானி சங்கர், கௌதம் கார்த்திக், கௌதம் வாசுதேவ் மேனன், கலையரசன் போன்ற பல பிரபலங்கள் நடிக்கிறார்கள். மேலும் ஏ ஆர் ரகுமான் இசையமைக்கிறார்.

Also Read : விஜய் படத்தின் பிரமோஷனுக்கு சென்ற சிம்பு.. உச்சகட்ட கோபத்தில் தயாரிப்பாளர்

இந்நிலையில் படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில் சிம்பு பிறந்தநாள் அன்று இப்படத்தின் முதல் பாடல் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. மேலும் இப்போது படத்திற்கான ப்ரோமோ வீடியோவை படக்குழு தயார் செய்து வருகிறதாம். மேலும் படம் குறித்து அப்டேட்க்காக சிம்பு ரசிகர்கள் காத்திருந்தார்கள்.

இந்த சூழலில் பத்து தல படப்பிடிப்பில் எடுக்கப்பட்ட சிம்பு புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி டிரெண்டாகி வருகிறது. அதில் நீண்ட தாடியுடன் மாஸ் லுக்கில் சிம்பு உள்ளார். சிம்பு தொட்டி ஜெயா படத்தில் உள்ளது போல் வாயில் ரத்தக் கரையுடன் கத்தி வைத்தபடி ஒரு புகைப்படம் வெளியாகி உள்ளது.

Also Read : மறுபடியும் வேதாளம் முருங்க மரம் ஏறுது.. மொத்த படக் குழுவையும் பரிதவிக்க விட்ட சிம்பு

அதேபோல் மற்றொன்று கையில் துப்பாக்கியுடன் சிம்பு இருக்கும் புகைப்படமும் வெளியாகி வைரலாகி வருகிறது. ஆகையால் இந்தப் படத்தில் சண்டை காட்சிகள் அதிகம் இடம்பெறும் என்பது இதன் மூலம் தெரிகிறது. மேலும் இப்போது சிம்பு பழையபடி ஆக்ஷனில் பட்டையை கிளப்ப வந்துள்ளார் என அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.

வாயில் கத்தியுடன் மாஸ் காட்டும் பத்து தல சிம்பு

pathu-thala-simbu-cinemapettai

கையில் துப்பாக்கியுடன் மாஸ் லுக்கில் சிம்பு

pathu-thala-simbu-cinemapettai

Also Read : வா மோதி பார்க்கலாம் என கூறிய சூரி.. எதிர்பார்க்காத புது டிவிஸ்ட், சிம்புவுக்கு வந்த புதிய தலைவலி!