Connect with us

Cinemapettai

மாநாடுக்கு பின்னும் சிம்புவை துரத்தும் வெங்கட் பிரபு.. அசத்தலான அடுத்த பட அப்டேட்!

simbu-01

Tamil Cinema News | சினிமா செய்திகள்

மாநாடுக்கு பின்னும் சிம்புவை துரத்தும் வெங்கட் பிரபு.. அசத்தலான அடுத்த பட அப்டேட்!

தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பின்னர் ஹீரோவாக உருவெடுத்தவர் தான் சிம்பு. இவர் சினிமாவில் வளர்ந்து வந்த காலத்தில் பல சர்ச்சைகளில் சிக்கியதால் இவருடைய கெரியர் மிகவும் மோசமடைந்தது.

மேலும் விட்ட இடத்தை பிடிப்பதற்காக பல்வேறு முயற்சிகளை சிம்பு எடுத்தும் அதனால் எந்த பயனும் அவருக்கு கிடைக்கவில்லை.

இதைத் தொடர்ந்து தான் சிம்பு தற்போது தன்னுடைய ரசிகர்களுக்காக உடல் எடையை வெகுவாக குறைத்து தீயாக வேலை செய்ய ஆரம்பித்திருக்கிறாராம்.

ஏற்கனவே சிம்புவின் நடிப்பில் ‘ஈஸ்வரன்’ படம் முப்பதே நாட்களில் தயாராகி உள்ள நிலையில், அடுத்ததாக மாநாடு பட சூட்டிங்கில் கலந்து கொண்டு இருக்கிறாராம் சிம்பு.

இந்த நிலையில் சிம்பு புதியதாக ஒரு படத்தில் நடிக்கவிருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளன.

அதாவது கொரோனா ஊரடங்கு பிறகு தீயாக வேலை செய்து கொண்டிருக்கும் சிம்புவுக்கு பட வாய்ப்புகள் குவிந்த வண்ணம் இருக்கின்றன.

மேலும் சிம்புவின் அப்பா டிஆர் தயாரிப்பாளர் சங்க தேர்தலில் தோற்றுப் போனதால், அவரது மனைவி அந்த கௌரவ குறைச்சலை சரிசெய்ய, சிம்பு இலவசமாக ஒரு படத்தை தயாரிப்பாளர் சங்கத்தில் தற்போது உள்ள நிதி சிக்கலை தீர்ப்பதற்காக நடித்து கொடுப்பார் என்று கூறியுள்ளாராம்.

இந்த படத்தில்தான் சிம்பு அடுத்ததாக நடிக்கவிருக்கிறாராம். அந்தப் படத்தை சிம்பு சினி ஆர்ட்ஸ் தயாரிக்க இருப்பதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளன.

simbu-vp-cinemapettai

simbu-vp-cinemapettai

மேலும் கொரோனா காலகட்டத்தில் மாநாடு படத்திற்கு பதிலாக குறைந்த பட்ஜெட்டில் எடுக்க தயார் செய்யப்பட்ட வெங்கட் பிரபுவின் கதையில்தான் சிம்பு நடிக்க உள்ளாராம். இந்தப் படத்தின் மூலம் 12 கோடி ரூபாய் லாபம் பெற முடியும் என்று கணக்கிடப்பட்டு உள்ளதாம்.

இதனால் மாநாடு படத்தை தொடர்ந்து சிம்பு தனது அடுத்த படத்தை தேர்ந்தெடுத்து விட்டார் என்ற தகவல்கள் இணையத்தில் பரவி, சிம்புவின் ரசிகர்களை குஷிப்படுத்தி உள்ளது.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோ பார்க்க Youtube-ல் Follow பண்ணுங்க.

Continue Reading
To Top