Tamil Cinema News | சினிமா செய்திகள்
மன்மதனாக மாறி புது அவதாரம் எடுத்துள்ள சிம்பு.. நியூ லுக்கால் மொய்க்கும் ரசிகை கூட்டம்!
கடந்த சில நாட்களாகவே தமிழ் சினிமாவின் ஹாட் டாபிக்காக இருப்பது சிம்பு தான். தற்போது இவர் சுசீந்திரன் இயக்கிவரும் பெயரிடப்படாத ஒரு படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார் என்பது நாம் அறிந்ததே.
இந்த நிலையில் சிம்பு இந்த படத்திற்காக வெயிட் லாஸ் பண்ணி பிட்டாக மாறிய பிறகு தனது முகத்தை எந்த ஒரு சமூக வலைத்தளத்திலும் பதிவிடாமல் இருந்தார். ஆனால் தற்போது அவருடைய நியூ லுக் புகைப்படம் இணையத்தில் வைரலாகி ரசிகர்களை குஷிப்படுத்தி வருகிறது.
அதாவது சுசீந்திரன் இயக்கத்தில் தயாராகிக் கொண்டிருக்கும் படத்தின் சூட்டிங் ஸ்பாட்டிற்கு சிம்புவின் சீக்ரெட்டை மெயின்டெய்ன் பண்ணுவதற்காகவே செல்போனை எவரும் எடுத்துச் செல்ல அனுமதி அளிக்கப்படவில்லை. இவ்வாறு பல கட்டுப்பாடுகளை கொண்டிருந்தும் சிம்புவின் போட்டோ வெளியானது படக்குழுவினரை அதிர்ச்சி ஆக்கியுள்ளது.
மேலும் சினிமா துறையில் இருப்பவர்கள் அனைவருக்கும் கை கொடுத்து காலம் முழுவதும் காப்பாற்றுவது அவர்களுடைய ஃபிட்டான பாடியும் முகத்தோற்றமும் தான். ஆனால் இது சிம்புவுக்கு இப்பதான் உரச்சு இருக்கு.
ஏனெனில் கடந்த வருடம் வெளியான ‘வந்தா ராஜாவா தான் வருவேன்’ படத்தில் பெரிய உடம்புடன் கிழவன் போல தோற்றம் அளித்திருந்தார் சிம்பு. இதன் காரணமாக இவர் கடுமையாக உடற்பயிற்சி செய்து தனது உடலை கட்டுமஸ்தாக மாற்றியுள்ளார்.
இந்தப் புகைப்படத்தில் உள்ள சிம்பு ஃபர்ஸ்ட் இன்னிங்சில் வந்த மன்மதன் சிம்பு தற்போது தாடி மீசையுடன் இருப்பது போல உள்ளார்.
இந்த புகைப்படத்தை பார்த்த சிம்புவின் ரசிகர்கள் குஷியில் கும்மாளம் போட்டு கொண்டிருக்கின்றனர்.
இவ்வாறிருக்க தற்போது ‘மன்மதன் சிம்புவின் லீலைகள் தொடருமா இல்லை படவாய்ப்புகள் கிடைக்குமா’ என்ற சந்தேகமும் ரசிகர்களிடையே அதிக அளவில் எழுந்துள்ளது.

str-simbu
