Tamil Cinema News | சினிமா செய்திகள்
சிம்புவின் கெத்தான புது கெட்டப்பால் அதிர்ந்து போன கோலிவுட்.. அடுத்து ஹாலிவுட் போய்டுவார் போல!
தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பின்னர் முன்னணி ஹீரோவாக உருவெடுத்தவர்தான் நடிகர் சிம்பு. இவர் கேரளாவுக்கு சென்று தனது உடல் எடையை குறைத்த பிறகு எந்த ஒரு புகைப்படத்தையும் இதுவரை வெளியிடவில்லை.
இந்தநிலையில் தற்போது சிம்பு அவருடைய சமூக வலைதளப் பக்கத்தில் நீண்ட தாடியுடன் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறார். மேலும் இந்த புகைப்படங்களை பார்த்த அவரது ரசிகைகள் பலர், அவரது மாசான கெட்டப்பில் மயங்கிக் கிடக்கின்றனர்.
அதாவது சிம்பு ‘மாநாடு’ படத்திற்காக தன்னுடைய உடல் எடையை நூறு கிலோவிலிருந்து 70 கிலோவாக குறைத்தார். இந்த நிலையில் அவர் எங்கு சென்றாலும் முகத்தை மூடிக்கொண்டு தான் சென்று வருவார்.
மேலும் சிம்பு, எடையை குறைத்த பிறகு அவருடைய புகைப்படங்களை சமூகவலைதளங்களில் வெளியிடாமல் சீக்ரெட்டாக வைத்திருந்தார்.
ஆனால் தற்போது அவரது ட்விட்டர் பக்கத்தில் நீண்ட தாடியுடன் கருப்பு உடையில் மாசான கெட்டப்பில் தரமான போஸ் கொடுத்துள்ள புகைப்படங்களை வெளியிட்டு, கோலிவுட்டையே மிரள வைத்துள்ளார்.
மேலும் இந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருவதோடு மட்டுமல்லாமல், அவரது ரசிகர்களால் அதிக அளவில் ஷேர் செய்யப்பட்டு வருகிறது.
எனவே, சிம்புவின் இந்த கெத்தான லுக்கை பார்த்த அவரது ரசிகைகள், ‘பழைய மன்மதன் கிளம்பிட்டாருடா’ என்று அந்த போட்டோவை கொண்டாடிக் கொண்டிருக்கின்றனர்.
