Connect with us
Cinemapettai

Cinemapettai

simbu-cinemapettai

Tamil Cinema News | சினிமா செய்திகள்

இருமுடி கட்டி ஐயப்பனிடம் அட்டனன்ஸ் போட கிளம்பிய சிம்பு.. தாறுமாறாக வைரலாகும் புகைப்படங்கள்!

கோலிவுட்டில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, கதாநாயகனாக மாறியவர் தான் நடிகர் சிம்பு. இவர் நடிப்பதோடு மட்டுமல்லாமல்,  இயக்குனர், பாடகர், கதாசிரியர் என பல அவதாரங்களை எடுத்து  சிறுவயதிலேயே திரைத்துறையை மிரட்டிவிட்டார்.

மேலும் சிம்பு பெரிய நடிகர் ஆவார் என பலரும் எதிர்பார்த்து வந்த நிலையில், பல காரணங்களால் சிம்பு அந்த நிலையை எட்ட முடியவில்லை. ஏனென்றால் கடந்த சில காலங்களாக சிம்புவின் நடிப்பில் வெளிவந்த எந்த ஒரு படமும் சொல்லிக் கொள்ளும் வகையில் இல்லை. இதனால் சிம்புவின் ரசிகர்கள் பலரும் தவிப்பில் இருந்து வந்தனர்.

இவ்வாறிருக்க, சமீபத்தில் சிம்பு தனது ரசிகர்களுக்காக உடல் எடையை பெருமளவு குறைத்து, கம்பேக் கொடுக்க திட்டமிட்டதோடு படுஜோராக வேலை செய்து வருகிறார் என்ற தகவல்கள் நாம் ஏற்கனவே அறிந்தது தான்.

இந்த நிலையில் சிம்பு, ஐயப்பனை தரிசிக்க சபரி மலைக்கு சென்று உள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன. தற்போது அந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி தாறுமாறாக வைரலாகி வருகின்றன.

அதாவது வெங்கட்பிரபுவின் மாநாடு படத்தில் சில பிரச்சனைகள் ஏற்பட்டபோது, தன்னுடைய கம்பேக் நன்றாக அமையவேண்டும் என்பதற்காக சிம்பு வேண்டுதல் வைத்து, கடும் விரதம் மேற்கொண்டு சபரிமலைக்கு சென்று வந்ததாக சொல்லப்பட்டது.

தற்போது இந்த ஆண்டு சிம்பு மீண்டும் சபரிமலைக்கு செல்ல மாலை அணிந்து, விரதம் இருந்ததாக கூறப்படுகிறது. மேலும் புதுச்சேரியில் நடைபெற்ற ‘மாநாடு’ படத்தின் ஷூட்டிங் முடிந்து விட்டதால், இன்னும் சில நாட்களில் சேலம், ஏற்காடு போன்ற பகுதிகளில் ஷூட்டிங் ஆரம்பமாக உள்ளதாம்.

simbu-cinemapettai

simbu-cinemapettai

இந்த இடைவெளியை பயன்படுத்தி சிம்பு ஐயப்பனை தரிசிக்க முடிவு செய்துள்ளாராம். எனவே, சபரிமலைக்கு புறப்பட்ட சிம்புவின் புகைப்படங்கள் தற்போது  இணையத்தில் தாறுமாறாக வைரலாகி வருகிறது.

str-simbu

str-simbu

Continue Reading
To Top