Connect with us
Cinemapettai

Cinemapettai

suriya-vijay-amazon-release-master-cinemapettai

Tamil Cinema News | சினிமா செய்திகள்

விஜய்,சூர்யாவை பின்பற்றும் சிம்பு.. உண்மையான தாராள பிரபு நீங்க தான்.! என்ன இப்படி திருந்திட்டாரு!

தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தற்போது முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் சிம்பு.

என்னதான் சிம்பு சினிமா துறையில் அடுத்தடுத்ததாக பல சர்ச்சைகளில் சிக்கினாலும் அவருக்கு என்று ஒரு தனி ரசிகர் பட்டாளமே தமிழகத்தில் இருந்து கொண்டுதான் வருகிறது. இதன் விளைவாக தான் அவர் சில தோல்விப் படங்கள் கொடுத்தாலும் சிம்புவின் ரசிகர்கள் அவரை கைகொடுத்து மேலே தூக்கிவிட்டனர்.

இந்த நிலையில் சிம்பு தற்போது அவருடைய நடிப்பில் தயாராகி இருக்கும் ‘ஈஸ்வரன்’ படத்தின் படக்குழுவினருக்கு தீபாவளி பரிசினை கொடுத்து தன்னுடைய தாராள மனதை வெளிச்சம் போட்டு காட்டியுள்ளார் என்ற தகவல் வைரலாக பரவி வருகிறது.

அதாவது இயக்குனர் சுசீந்திரன் இயக்கத்தில், நாற்பது நாட்களிலேயே படப்பிடிப்பை முடித்து தயாராகி இருக்கும் படம் தான் ‘ஈஸ்வரன்’.

இவ்வாறிருக்க சிலம்பரசன் தற்போது இந்த படத்தில் பணியாற்றிய 400 பேருக்கும் ஒரு கிராம் தங்கம், வேட்டி, சேலை, இனிப்புகள் என தீபாவளி பரிசினை வழங்கி படக்குழுவினர் அனைவரையும் நெகிழ்ச்சிபடுத்தியுள்ளார்.

மேலும் இந்த படத்தில் நடித்த துணை  நடிகர்கள் 200 பேருக்கு வேட்டி சேலை, இனிப்புகள் வழங்கி மகிழ்வித்திருக்கிறார்.

இவ்வாறு தீபாவளிக்காக பரிசினை அளித்து இன்ப அதிர்ச்சி கொடுத்திருக்கும் சிம்புவுக்கு தங்களது நன்றியையும் ,வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகின்றனர் படக்குழுவினர்.

மேலும் இந்த படத்தின் டீசர் தீபாவளிக்கு வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது. இந்த செய்தியை கேட்ட சிம்புவின் ரசிகர்கள் ‘ஈஸ்வரன்’ படத்தினை காண ஆவலோடு காத்துக் கொண்டிருக்கின்றனர்.

str-simbu

str-simbu

Continue Reading
To Top