சிம்புவின் ஒட்டு மொத்த கேரியரையும் சமீபத்தில் வெளிவந்த ஏஏஏ படம் தீய்த்து விட்டது. அடுத்து கெட்டவன் படத்தை ஆரம்பிக்கலாமா? அல்லது நடிப்புக்கு முழுக்குப்போட்டுவிட்டு படம் இயக்குவதோடு நிறுத்திக் கொள்ளலாமா..? என்ற குழப்பத்தில் இருந்தார் சிம்பு. இப்போது ஒரே படத்தில் உச்சம் தொட்டு சரிந்த வாய்ப்பை மீட்டெடுக்க வேண்டும் என்கிற தீர்க்கமான முடிவுக்கு வந்திருக்கிறார். எப்படி..? ரஜினிகாந்த் நடித்து ஹிட்டடித்த பில்லா ரீமேக்கான பில்லா-2ல் அஜீத் நடித்து மாபெரும் ஹிட்டடித்தது.

இப்போது பில்லா-3 படத்தில் நடித்து தனது செல்வாக்கை மீட்டெடுக்க முடிவு செய்திருக்கிறாராம். இந்த செய்தி சமூக வலைதளங்களில் பரவி சிம்புவுக்கு ஆதரவாகவும், எதிராகவும் கச்சை கட்டி வருகின்றன.ஏற்கனவே ‘பில்லா 3’ குறித்து இயக்குனர் வெங்கட்பிரபு மற்றும் சிம்பு டுவிட்டரில் உரையாடியுள்ள நிலையில் தற்போது இந்த படத்தை வெங்கட்பிரபு அல்லது விஷ்ணுவர்தன் இயக்க அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கெனவே இதுகுறித்து பேசியுள்ள சிம்பு, பில்லா-3 படத்தில் நடிக்கும் திட்டம் இருக்கிறது.

அதிகம் படித்தவை:  அஜித் இந்த நடிகர்களுக்கு இணையானவர்- சொல்கிறார் வீரம் வனங்காமுடி

ஆனால் அது பில்லா ரீமேக்காக இருக்காது. இந்த காலகட்டத்தில் பில்லா இருந்திருந்தால் என்ன செய்வார் என்பதை மையமாக வைத்து படம் இருக்கும்’ எனக் கூறி இருந்தார்.விவேகம் படத்தை அடுத்து அஜீத் விஷ்ணுவர்த்தன் படத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.Simbu-Superstar-AAA Teaser

அதிகம் படித்தவை:  அஜித்தின் அமர்க்களம் வந்த போது வசூல் அள்ளியது எத்தனை கோடி தெரியுமா.?!!!

விஷ்ணுவர்தன் ஏற்கெனவே பில்லா-3 படத்தின் கதையை எழுதி முடித்து விட்டார். ஆகையால் இந்தப்படத்தை வெங்கட் பிரபு இயக்க வாய்ப்பே இல்லை. ஒருவேளை அஜீத்தின் அடுத்த படத்தை விஷ்ணுவர்த்தன் இயக்கினால் சிம்புவின் பில்லா-3 கனவு செல்லாமல் போய் விடும். ஆக, சிம்புவின் சினிமா கேரியர் அஜீத் எடுக்கும் முடிவை பொறுத்தே அமையும். வாலு தல ஆகுமா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.