சிம்பு நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கவுள்ள ‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’ திரைப்படம் படப்பிடிப்பு தொடங்கும் முன்பே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வரும் நிலையில் இந்த படத்திற்காக யுவன்ஷங்கர் ராஜா ஒன்பது பாடல்களை கம்போஸ் செய்யவுள்ளார் என்பது அறிந்ததே.

இந்நிலையில் ரசிகர்களின் விருப்பத்திற்கிணங்க இந்த ஒன்பது பாடல்களையும் வாரம் ஒரு பாடலாக வெளியிட சிம்பு-யுவன் கூட்டணி முடிவு செய்துள்ளது. முதல் பாடல் இன்னும் ஒருசில வாரத்தில் வெளிவரும் என்றும் அதன்பின்னர் ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு பாடலாக மொத்தம் ஒன்பது வகை இசை விருந்துகளை ஒன்பது வாரங்களுக்கு ரசிகர்களுக்காக அளிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

மூன்று வித்தியாசமான வேடங்களில் நடிக்கும் சிம்புவுக்கு ஒரு ஜோடியாக ஸ்ரேயாவும் மற்ற இரு ஜோடிகளின் தேர்வுகள் நடைபெற்று வருவதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது. மேலும் இந்த படத்தில் விடிவி கணேஷ் முக்கிய வேடத்தில் நடிக்கின்றார் என்பது குறிப்பிடத்தக்கது