Tamil Cinema News | சினிமா செய்திகள்
மீண்டும் ஆண்ட்ரியாவுடன் சேரும் சிம்பு.. அய்யய்யோ என பதறிய ரசிகர்கள்
சிம்பு சினிமாவில் நடிப்பார் என நீண்ட நாட்களாக அவரது ரசிகர்கள் ஏங்கி ஏங்கி வீங்கிப் போய் உள்ளனர். ஆனால் அவரோ அதைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல் தனக்கு தோன்றுவதை செய்து கொண்டு ஜாலியாக இருக்கிறார்.
அந்தவகையில் தற்போது சிம்பு, சர்ச்சை பாடகி ஆண்ட்ரியாவுடன் சேர உள்ளார். அதுவும் நடிப்புக்காக இல்ல. பாட்டு பாட தான். கப்பல் இயக்குனர் கார்த்திகேயன் இயக்கத்தில் சித்தார்த் நடித்து வரும் படம் டக்கர். இதில் கதாநாயகியாக திவ்யான்ஷா கௌசிக் என்பவர் நடிக்க இருக்கிறார்.
மேலும் யோகி பாபு, முனீஸ்காந்த் என ஒரு நட்சத்திர பட்டாளமே நடிக்கிறது. இதுவரை சிம்பு நடிகதான் மாட்டாரு, பாட்டு கூடவா பாடமாட்டார் என ஏங்கிக் கொண்டிருந்த ரசிகர்களுக்கு புத்துணர்ச்சி ஊட்டும் வகையில் டக்கர் படத்தில் பாட உள்ளார்.
சிம்புவுடன் சேர்ந்து ஆண்ட்ரியாவும் பாட இருப்பதால் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் உள்ளனர்.
