2 பேரால் சர்வமும் அடங்கிப்போன சிம்பு.. ரஜினியை மிஞ்சி செய்ய போகும் காரியம்

Simbu : மன்மதன் சிம்பு எல்லாம் மலையேறி பலகாலம் ஆட்சி என்பது போல தான் இப்போது சிம்புவின் நடவடிக்கை மொத்தமாக மாறி இருக்கிறது. மாநாடு படத்தில் இருந்து சிம்புவுக்கு நல்ல காலம் தொடங்கி விட்டது. தொடர்ந்து அடுத்தடுத்த வெற்றி படங்களை கொடுத்து வருகிறார்.

அந்த வகையில் இப்போது மணிரத்னம் இயக்கத்தில் கமல் நடிப்பில் உருவாகி வரும் தக் லைஃப் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் சிம்பு நடித்து வருகிறார். இதில் தான் இப்போது வேறு ஒரு சிம்புவாக எல்லோருக்கும் தெரிகிறாராம். அதாவது இதுவரை சிம்பு தக் லைஃப் படத்தின் சூட்டிங் போனது போல் எந்த படத்திற்கும் போனதில்லையாம்.

அதாவது இந்தப் படத்தில் தொடர்ந்து 40 நாள் இடைவிடாமல் கால்ஷீட் கொடுத்து இருக்கிறார் சிம்பு. இதில் சின்ன ஒரு கரும்புள்ளி கூட அவருக்கு இல்லையாம். காலை 6:00 மணிக்கு ஷூட்டிங் என்றால் கரெக்டாக ஐந்து மணிக்கு ஸ்பாட்டில் இருப்பாராம்.

மொத்தமாக உருமாறிய சிம்பு

மேலும் படப்பிடிப்பு முடிந்தவுடன் தானொண்டு தன் வேலை உண்டு என்று அங்கிருந்து கிளம்பி விடுவாராம். இதற்கெல்லாம் காரணம் கமல் மற்றும் மணிரத்னம் தான். அவர்களுடைய படம் என்பதால் சரியான நேரத்திற்கு வருவது, கொடுத்த வேலையை செய்வது என சிம்பு நடந்து கொள்கிறார்.

மேலும் வருகின்ற செப்டம்பர் 22ஆம் தேதிக்குள் சிம்புவின் காட்சிகள் நிறைவடைகிறது. அதன் பிறகு சூப்பர் ஸ்டார் ரஜினியை போல் ஒரு மாதம் இமயமலைக்கு சிம்பு செல்ல இருக்கிறாராம். அங்கு ஆன்மீகத்தில் ஈடுபட உள்ளார்.

சிம்புக்குள் இப்படி ஒரு மாற்றமா என அனைவரும் ஆச்சரியப்படுகிறார்கள். கண்டிப்பாக இந்த மாற்றம் சிம்புவுக்கு சினிமாவில் ஒரு நல்ல இடத்தை பெற்று தரும் என்றும் கூறி வருகிறார்கள். மேலும் லிட்டில் சூப்பர் ஸ்டார் என்ற பெயர் பெற்ற சிம்பு இப்போது ரஜினியை ஃபாலோ செய்து வருகிறார்.

புதிய பாதையில் சிம்பு

Next Story

- Advertisement -