Tamil Cinema News | சினிமா செய்திகள்
டிஆர் தாடி, மொத்தமாக உருகிப்போன பாடி.. உடல் எடையை குறைத்த சிம்புவின் லேட்டஸ்ட் புகைப்படம்
நீண்ட நாட்களுக்கு பிறகு வந்தா ராஜாவா தான் வருவேன் என்ற படத்தின் மூலம் ரீ-என்ட்ரி கொடுத்தார் சிம்பு.
அதற்கு முன்னர் மணிரத்தினம் இயக்கிய செக்கச் சிவந்த வானம் படத்தில் வருகின்ற பல ஹீரோக்களில் ஒருவராக வந்த சிம்பு தனி ஒரு ஹீரோவாக நடித்த படம் வந்தா ராஜாவா தான் வருவேன்.
அதில் சிம்புவின் உடல் எடை கூடி இருந்ததால் அவரது ரசிகர்களுக்கு அந்த படம் சற்று ஏமாற்றத்தை கொடுத்தது. பாக்ஸ் ஆபீஸ் வசூலிலும் தடுமாறியது.
இந்நிலையில் சிம்பு உடலை குறைத்தே ஆகவேண்டும் என்ற கட்டத்திற்கு தள்ளப்பட்ட நிலையில் தற்போது 100 கிலோவில் இருந்து 75 கிலோவாக தனது உடலை குறைத்து விட்டாராம்.
அந்த புகைப்படங்கள் தான் தற்போது இணையதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

simbu-latest-cinemapettai
அடுத்த மாதம் முதல் வாரம் மாநாடு படப்பிடிப்பு ஹைதராபாத்தில் தொடங்க இருந்த நிலையில் அதற்கு முன்னராக திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு விசிட் அடித்துள்ளார் சிம்பு.

simbu-latest-cinemapettai-01
அதில் சிம்புவின் தந்தை டி ஆர் போல் முகம் முழுக்க தாடி மற்றும் உருகிப்போன பாடி என மொத்தமாக மாறி சிம்பு வேறு ஆளாக வந்து கெத்து காட்டுகிறார்.
