Tamil Cinema News | சினிமா செய்திகள்
பிரபல கிரிக்கெட் வீரருக்கு குரல் கொடுத்த சிம்பு.. வேற லெவல் போங்க
தமிழில் முதன்மை நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் STR என்கிற சிலம்பரசன். நடிப்பு நாயகன் என்று மட்டமல்லாது இயக்கம் பாடல் இசை என எல்லாவற்றிலும் வல்லவனாக இருக்கும் மன்மதன் தான் சிம்பு.
அக்னி தேவி,சென்னையில் ஒருநாள்2 படங்களின் இயக்குனர்களான இரட்டை இரக்குனர்கள் எடுக்கும் அடுத்த படம் ஃப்ரண்ட்ஷிப்.இப்படத்தில் சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங் தமிழ் சினிமாவில் நடிகராய் களமிறங்குகிறார். இப்படத்தில் பிக்பாஸ் புகழ் லாஸ்லியா முதல் முறை தமிழ் சினிமாவில் களமிறங்குகிறார்.
இப்படம் குறித்து இயக்குனர்கள் கூறுகையில் படம் தலைப்பிற்கு ஏற்றார் போல நண்பர்களின் கதைதான் என்றும் கல்லூரி காலத்திய ஐந்து நண்பர்களில் ஒருவர் தான் ஹர்பஜன் அந்த ஐவரில் ஒருவர் தான் லாஸ்லியா என்றும் கூறினர். மேலும் படத்தில் கிரிக்கெட் காட்சியும் ஒன்று உள்ளது என்றும் ஆனால் அதை நோக்கியே கதையை நகற்றாமல் கதையில் நிறைய நல்ல விடயங்களை கூறியுள்ளதாகவும் கூறினர்.

LOSLIYA-FRIENDSHIP-CINEMAPETTAI
இப்படத்திற்கு பின்பு ஆண் பெண் நட்பிற்கு பெற்றோர்களிடையே நல்ல வரவேற்பும் மரியாதையும் கிடைக்கும் என்றும் கூறுகின்றனர்.சரி இந்த படத்திற்கும் சிம்புவுக்கும் என்னதான் தொடர்பு என்றால் நடிகர் சிம்புவின் குரலில் ஒரு பாடல் ஒலிக்கவிருக்கிறது இந்த படத்தில்.
ஏற்கனவே மாநாடு மற்றும் வெந்து தனிந்தது காடு படங்களுக்காக காத்திருக்கும் ரசிகர்களை குஷிப்படுத்த அதி விரைவில் அரங்கங்களை தன் குரலால் அதிர வைக்க உள்ளார் STR என்பது மேலும் ஒரு எதிர்பார்ப்பை கூட்டியுள்ளது.
