சிம்பு வெங்கட் பிரபு இணையும் படத்தின் தலைப்பு இதுதான்.!

சிம்பு தமில் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர் இவர் தனக்கென்ன ஒரு மாபெரும் ரசிகர்கள் வட்டத்தை வைத்திருப்பவர் இவர் சமீபகாலமாக தனது பெயரை மிகவும் டேமேஜ் செய்துகொண்டார், ஆனால் தற்பொழுது எந்த விமர்சனமும் இல்லாமல் தான் உண்டு தனது நடிப்பு உண்டு என இருக்கிறார்.

செக்கச் சிவந்த வானம்’ படத்தை தொடர்ந்து சிம்பு அடுத்ததாக வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். வி ஹவுஸ் புரொடக்‌ஷன்ஸ் சார்பில் சுரேஷ் காமாட்சி தயாரிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்க இருக்கும் நிலையில், படத்திற்கு ‘மாநாடு’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

மேலும் ஒரு போஸ்டரையும் படக்குழு வெளியிட்டுள்ளது. அந்த போஸ்டரில் “தனியாக நின்றாலும், நியாயத்தின் பக்கம் துணையாக நிற்க வேண்டும்” என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது.