வெந்து தணிந்த காடு சிம்புவின் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள்.. சிறு பையனாக வெளிவந்த நியூ லுக்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் சிம்பு இவரது நடிப்பில் வெளியான படங்கள் அனைத்திலும் சமீபகாலமாக நல்ல வரவேற்பை பெற்றதையடுத்து தொடர்ந்து பல இயக்குனர்கள் சிம்புவை வைத்து படங்களை இயக்கி வருகின்றனர்.

சிம்பு தற்போது மாநாடு எனும் படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் அடுத்தடுத்து சிம்பு படங்கள் மீதான எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது. சிம்பு தற்போது பத்து தல எனும் படத்திலும் நடித்து வருகிறார்.

மேலும் சிம்பு கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் விண்ணைத்தாண்டி வருவாயா எனும் படத்தில் நடித்து பெரிய அளவில் ரசிகர்களின் வரவேற்பைப் பெற்றார் அதனால் இவர்களது கூட்டணி மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் அதிகரித்து அதைத் தொடர்ந்துதான் அச்சம் என்பது மடமையடா எனும் படத்தில் நடித்தார்.

vendhu thanidhathu kaadu
vendhu thanidhathu kaadu

மிகப் பெரிய எதிர்பார்ப்பில் வெளியான இப்படம் பெரிய வரவேற்பு பெறவில்லை அதன் பிறகு சிம்பு மற்ற இயக்குனர்களின் கதைகளில் நடிக்க ஆரம்பித்தார் தற்போது மீண்டும் கௌதம் வாசுதேவ் மேனன் தனக்கு ஒரு வெற்றிப் படத்தைக் கொடுப்பார் எனும் நம்பிக்கையில் வாய்ப்பு கொடுத்துள்ளார்.

venthu thanindhathu kaadu
venthu thanindhathu kaadu

தற்போது சிம்பு வெந்து தணிந்தது காடு எனும் படத்தில் நடித்து வருகிறார் இப்படத்தை கவுதம் வாசுதேவ் இயக்கி வருகிறார். இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றதையடுத்து தற்போது சூட்டிங் ஸ்பாட் புகைப்படம் வெளியாகியுள்ளது.

அந்த புகைப்படத்தில் சிம்பு கௌதம் வாசுதேவ் மேனன் மற்றும் ராதிகா ஆகியோர் உள்ளனர். தற்போது படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. தற்போது புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்