Tamil Cinema News | சினிமா செய்திகள்
அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி ரசிகர்களுக்கு ஷாக் கொடுக்கும் சிம்பு.. தூக்கத்தை தொலைத்த தயாரிப்பாளர்கள்
கொரோனா லாக் டவுனுக்கு முன்பு வெங்கட் பிரபு இயக்கத்தில், சிம்பு நடித்துக்கொண்டிருந்த படம்தான் ‘மாநாடு’. சிம்பு இந்த படத்திற்காக தனது உடல் எடையை குறைத்து பிட்டாக இருக்கிறார் என்று தெரிந்த சிம்புவின் ரசிகர்கள், இந்தப் படத்திற்காக பெரும் ஆவலாக காத்துக் கொண்டிருக்கின்றனர்.
மேலும் அரசின் பல தளர்வுகளுக்கு பிறகும் ‘மாநாடு’ பட சூட்டிங் தொடங்காமல் இருந்தது சிம்புவின் ரசிகர்களுக்கு படம் துவங்குமா இல்லையா என்ற சந்தேகத்தை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் தற்போது ரசிகர்களின் சந்தேகத்திற்கு எல்லாம் முட்டுக்கட்டை போடும் விதமாக, இந்த படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி ட்விட்டர் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில் அவர், ‘தடைகள் உடைத்து, கொரோனா பாதிப்புகள் கடந்து, மாநாடு நவம்பர் முதல் வாரம் படப்பிடிப்பு துவங்குகிறோம்’ என்று தெரிவித்துள்ளார். சுரேஷ் காமாட்சியின் ட்வீட்டை பார்த்த சிம்பு ரசிகர்கள் சற்று நிம்மதி அடைந்துள்ளனர்.
இந்நிலையில் சிம்பு, சுசீந்திரன் இயக்கத்தில் புது படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார் என்பதும் நாம் அறிந்ததே. இதையடுத்து கமல்ஹாசன் தயாரிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ஒரு படத்திலும் சிம்பு நடிக்க சம்மதம் தெரிவித்திருப்பது சிம்பு ரசிகர்களுக்கு அடுத்தடுத்த இன்ப அதிர்ச்சிகளை அளித்து வருகிறது.
மேலும் புதுப்புது கதைகளில் வித்தியாசமான கதாபாத்திரங்களுக்கு பெயர் போனவர் தான் லோகேஷ் கனகராஜ். இவரது இயக்கத்தில் சிம்பு நடிக்கவிருப்பது சிம்புவின் ரசிகர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை அளித்துள்ளது.

maanaadu
இதுபோன்ற சிம்புவின் புது புது படங்களின் அப்டேட்களை எல்லாம் கேட்ட சிம்புவின் ரசிகர்கள் ‘யானைக்கு ஒரு காலம் வந்தால் பூனைக்கும் ஒரு காலம் வரும்’ என்று பெருமளவில் குஷி அடைந்துள்ளனர்.
