Tamil Cinema News | சினிமா செய்திகள்
உடல் எடையை குறைத்து, தாடியுடன் அச்சு அசல் TR போலவே மாறிய சிம்பு.. வைரலாகும் புகைப்படம்!
தமிழ் சினிமாவில் 80களில் நடிகராக மட்டுமல்லாமல் இசையமைப்பாளர், திரைக்கதை, எழுத்து, பாடலாசிரியர், ஒளிப்பதிவாளர், தயாரிப்பாளர், பின்னணி பாடகர் என பல்வேறு திறமைகளுடன் வலம் வந்தவர் தான் நடிகர் டி. ராஜேந்திரன்(TR).
மேலும் அவருடைய மகனான சிலம்பரசன்(STR) என்ற சிம்புவை சிறு வயதிலிருந்தே தன்னுடைய படங்களில் நடிக்க வைப்பது, பாட வைப்பது போன்ற பன்முக திறமையை வெறியுடன் கற்றுக் கொடுத்தார்.
அதற்கேற்றார் சிம்புவும் குழந்தைப் பருவத்திலிருந்தே, தமிழ் மக்களுக்கு பிடித்தமான நடிகராக மாறிவிட்டார்.எனவே தற்போது இவருடைய புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் காட்டுத்தீ போல் பரவி வருகிறது.
அதில் தாடியுடன் இருக்கும் சிம்புவை பார்க்கும்போது அச்சு அசல் அவருடைய அப்பா TR போலவே இருப்பதால், அந்தப் புகைப்படம் ரசிகர்களால் வியந்து பார்க்கப்படுகிறது.
மேலும் சிம்பு தற்போது தனது உடல் எடையை குறைத்து மீண்டும் மன்மதன் ஆக உருவெடுத்ததால் வரிசையாக பல படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார்.

STR-Cinemapettai
அதில் ஒன்றாக சுசீந்திரன் இயக்கத்தில் கிராமத்துப் பின்னணியில் உருவான கதைகளத்தில் நடித்து வருவதால், அந்தப் படத்திற்கான கெட்டப் இதுதான் என்று ரசிகர்களால் கணிக்கப்படுகிறது. அதற்காக 20 கிலோ வர குறைத்து உள்ளாராம்.
