Connect with us
Cinemapettai

Cinemapettai

simbu-venkat

Tamil Cinema News | சினிமா செய்திகள்

மாநாட்டை மலை போல நம்பும் சிம்பு.. வெங்கட் பிரபு கொடுத்த வாக்குறுதிதான் இங்க ஹைலைட்

ஒருகாலத்தில் தயாரிப்பாளர்களை தவிக்க விட்டுக்கொண்டிருந்த சிம்பு தற்போது தயாரிப்பாளர்களின் சொல்பேச்சு கேட்டு நடப்பது அனைவருக்குமே ஆச்சரியம்தான். உடல் எடையை குறைத்து ரீ என்ட்ரி கொடுத்த பிறகு தற்போது வரை தயாரிப்பாளர்கள் சிம்புவின் மீது எந்த ஒரு குற்றச்சாட்டும் வைக்கவில்லை.

சிம்புவின் ரீஎன்ட்ரிக்கு பிறகு மிகவும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வெளியான ஈஸ்வரன் திரைப்படம் முதலுக்கு மோசம் இல்லை எனும் அளவிற்கு ஓரளவு ஓடி பெயரை காப்பாற்றியது. இருந்தாலும் ரசிகர்கள் மன்மதன், வல்லவன் போன்ற வெற்றிப்படங்களை எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கின்றனர்.

இந்நிலையில் தற்போது சிம்பு மற்றும் வெங்கட்பிரபு கூட்டணியில் மிகப்பெரிய பட்ஜெட்டில் மாநாடு படம் உருவாகி வருகிறது. மாநாடு படம் ஆரம்பிப்பதற்கு முன்னரே பல பஞ்சாயத்துகள் நடந்தது. ஒருவழியாக தயாரிப்பாளர் சிம்புவை சமாதானப்படுத்தி மாநாடு படப்பிடிப்பை தொடங்கி தற்போது இறுதிக் கட்டம் வரை சரியாக எடுத்துச் சென்றுள்ளார்.

சிம்பு நடிப்பில் உருவான படங்களிலேயே சரியான திட்டமிடுதலில் உருவாகும் இரண்டாவது படம் இதுவாகத்தான் இருக்கும். முன்னதாக ஈஸ்வரன் ஒரே மாதத்தில் எடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

maanadu-still-01

maanadu-still-01

சிம்பு மற்றும் வெங்கட்பிரபு ஆகிய இருவருக்கும் இந்த படம் ஒரு கம்பேக் படமாக இருக்கும் என மாநாடு வட்டாரங்களிலிருந்து செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. மேலும் அஜீத்துக்கு மங்காத்தா எப்படியோ அப்படித்தான் உங்களுக்கு மாநாடு இருக்கும் என சிம்புவுக்கு சத்தியம் செய்து கொடுத்துள்ளாராம் வெங்கட் பிரபு.

maanadu-still

maanadu-still

இதெல்லாம் நம்பற மாதிரியாங்க இருக்கு என சிம்புவே திருப்பி கேட்டு விட்டாராம். ஆனால் இதுவரை வந்த அரசியல் படங்களில் இந்த படம் வித்தியாசமாக இருக்கும் என ஆரம்பத்தில் இருந்தே படத்தின் மீதான எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறது படக்குழு. வெங்கட்பிரபுவின் ஒத்த வார்த்தையை நம்பி தன் மொத்த கேரியரையும் ஒப்படைத்துவிட்டார்.

Continue Reading
To Top