Videos | வீடியோக்கள்
விண்ணைத்தாண்டி வருவாயா 2 படத்தின் குட்டி வெர்ஷன்.. சிம்பு த்ரிஷாவின் படம்பிடித்த கவுதம் மேனன்
கௌதம் மேனன் சிம்புவை வைத்து இயக்கிய இரண்டு படங்களும் சூப்பர் ஹிட். அதில் விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் வெற்றியைப் பற்றி சொல்லித் தெரிய வேண்டியதில்லை.
கௌதம் மேனன் இயக்கத்தில் சிம்பு, த்ரிஷா நடிப்பில் ஏ ஆர் ரகுமான் இசையில் அனைத்து தரப்பு ரசிகர்களையும் தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடப்பட்ட திரைப்படம்தான் விண்ணைதாண்டி வருவாயா.
இந்நிலையில் ஊரடங்கு உத்தரவால் விண்ணைத்தாண்டி வருவாயா2 படத்தின் ஷார்ட் பிலிம் ஒன்றை கவுதம் மேனன் இயக்க முடித்துள்ளார். அதற்கு கார்த்திக் டயல் செய்த எண் என பெயர் வைத்துள்ளார்.
முழுக்க முழுக்க மொபைல் போன் வழியாகவே டைரக்ட் செய்து முடித்துள்ளார் கௌதம் மேனன். இந்த ஷாட் பிலிம் தற்போது வெளியாகி யூடியூப் தளங்களில் செம வைரலாகி வருகிறது.
கூடவே ரசிகர்கள், இப்படி வீட்டுக்குள்ளேயே சிம்புவை நடிக்க சொன்னா வருஷத்துக்கு 10 படம் கூட நடிப்பார் என கிண்டல் செய்தும் வருகின்றன.
சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.
