Tamil Cinema News | சினிமா செய்திகள்
சிம்புவின் சொத்து மதிப்பு தெரியுமா? ஷாக் ஆகிடுவீங்க!

தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தற்போது முன்னணி நடிகராக வலம் வருபவர் தான் சிம்பு. குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானதால், இவரை லிட்டில் சூப்பர் ஸ்டார் என்று அழைப்பார்கள். கோவில், மன்மதன், வல்லவன் போன்ற தொடர் வெற்றி படங்களை வழங்கிய சிம்பு தமிழ் சினிமாவில் புதிய டிரெண்டுகளை அறிமுகப்படுத்தினார்.
இவரது தந்தை டி.ராஜேந்திரனை போலவே சிம்புவும் நடிப்பது மட்டுமல்லாமல் படம் இயக்குவது, பாடல் பாடுவது, பாடல் எழுதுவதில் என அனைத்திலும் கவனம் செலுத்தி வருகிறார். இவற்றையெல்லாம்விட சிம்புவின் நடனத்திற்கு தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. அந்த அளவிற்கு அவரது நடனம் ரசிகர்களால் பாராட்டை பெற்று வருகிறது.
தொடர்ந்து படங்களில் நடித்து வந்த சிம்பு சக நடிகைகளுடன் காதல், படப்பிடிப்பிற்கு தாமதமாக வருவது போன்ற பல சர்ச்சைகளில் சிக்கி வந்தார். தற்போது சர்ச்சைகளில் இருந்து வெளிவந்த சிம்பு தனது உடல் எடையை முற்றிலுமாக குறைத்து புதிய ரூட்டில் பயணித்து வருகிறார்.

simbu-cinemapettai
தற்போது அடுத்தடுத்து புதிய படங்களில் சிம்பு கமிட்டாகியுள்ளார். முன்னதாக ஒரு படத்திற்கு 5 கோடி சம்பளம் வாங்கி வந்த நிலையில், தற்போது 10 கோடி வரை சம்பளம் வாங்கி வருவதாக தகவல்கள் வெளியாகி வருகிறது. மேலும், சிம்புவின் சொத்து மதிப்பு மட்டும் 150 கோடிக்கு மேல் இருக்கும் என கூறப்படுகிறது.
