Connect with us

Cinemapettai

சிம்புவின் டார்ச்சர்! கதறி அழுத தயாரிப்பாளர்.

Simbu-AAA

Tamil Cinema News | சினிமா செய்திகள்

சிம்புவின் டார்ச்சர்! கதறி அழுத தயாரிப்பாளர்.

தொடர்ச்சியாக தோல்விப்படங்களை கொடுத்துக் கொண்டிருந்தாலும் சிம்புவுக்கு என்னவோ ஒரு ரசிகர் கூட்டம் எப்போதும் இருந்து கொண்டுதான் உள்ளது. இதை நம்பி அவர் மீது பல தயாரிப்பாளர்கள் முன்வந்து பணம் போடுகின்றனர்.

ஆனால் சரியான கதை தேர்வின்மையால் சிம்புவின் பல படங்கள் அடுத்தடுத்து தோல்வியுற்று தயாரிப்பாளர்களுக்கு தொடர் நஷ்டத்தை ஏற்படுத்தி வருகிறது. அப்படி சிம்புவின் படத்திற்கு தயாரிப்பு செய்து தற்போது புலம்பி அழும் தயாரிப்பாளர்தான் GLOBAL INFOTAINMENT PRIVATE LIMITED தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வரும் தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன்.

Simbu

மைக்கேல் ராயப்பன்:

இவரது முதல் தயாரிப்பு சமுத்திரகனியின் நாடோடிகள். முதல் படமே வெற்றிப் படமாக அமைந்ததால் அதை தொடர்ந்து சிந்து சமவெளி, கோரிப்பாளையம், ஆடு புலி, தென்மேற்கு பருவக்காற்று, ஆயிரம் முத்தங்களுடன் தேன்மொழி, ஈட்டி, பட்டத்து யானை, ஒரு ஊர்ல ரெண்டு ராஜா, மிருதன், தற்போது கீ போன்ற படங்களை தயாரித்து வெளியிட்டுள்ளார். இவற்றில் ஏற்ற இறக்கங்கள் பல இருந்தாலும்

இவரை ஒரேயடியாக சாய்த்த படம் சிம்புவை வைத்து இவர் சமீபத்தில் தயாரித்த அன்பானவன் அசராதவன் அடங்காதவன் திரைப்படம்தான். படு சுமாராக கூட இந்த படம் ஓடவில்லை. தீவிர சிம்பு ரசிகர்கள் கூட திரையரங்கைவிட்டு பாதியிலேயே வெறுத்து வெளியேறும் அளவிற்கு இருந்தது இந்த திரைப்படம்.

தேமுதிக கட்சியின் முன்னாள் ராதாபுரம் சட்டமன்றத் தொகுதி உறுப்பினராகவும், தற்போது அதிமுக கட்சியின் முக்கிய பொறுப்பிலும் உள்ள தயாரிப்பாளர்  மைக்கேல் ராயப்பன் இந்த படத்தினால் சுமார் 20 கோடி ரூபாய் நஷ்டமாகி நடுத்தெருவுக்கு வந்துவிட்டாராம்.

படம் ஓடாததை கூட என்னால் பொறுத்துக் கொண்டு சமாளித்துவிட முடியும் ஆனால் அந்த படம் உருவாகியபோது சிம்பு என்னை செய்த டார்ச்சர் இருக்கிறதே அதை இப்போது நினைத்தாலும் மனம் வலிக்கிறது என்று கண்ணீர் விட்டு பத்திரிக்கையாளர்களிடம் புலம்பியுள்ளார் ராயப்பன்.

மைக்கேல் ராயப்பன் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு:

Simbu

“எனக்கு சினிமா மீது இருந்த அதீத மோகத்தால்.. லட்சியத்தால்.. வெறியால்தான் கடந்த 9 வருடங்களில் 12 படங்களை தயாரித்தேன். பல படங்கள் சுமாராக ஓடினாலும் வருடத்திற்கு நம்மால் 500 தொழிலாளர்களுக்கு வேலை தர முடிகிறதே என்ற ஆத்ம திருப்தியிலும். எப்படியும் வெற்றியை அடைந்தே தீருவேன் என்ற வெறியிலும்தான்… படத் தயாரிப்பை தொடர்ந்து நடத்தி வந்தேன்.

ஆனால் இந்தாண்டு நான் தயாரித்த அன்பானவன் அசராதவன் அடங்காதவன் திரைப்படம், அதன் நாயகன் சிம்புவால் என்னை அதல பாதாளத்திற்குக் கொண்டு செல்லும் என்று நான் கனவிலும் நினைக்கவில்லை.

இந்தப் படம் தொடர்பாக தற்போது தமிழ்த் திரையுலகிலும், பத்திரிகையுலகத்திலும் நிலவி வரும் பல தரப்பட்ட செய்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும்விதமாக அதன் உண்மை நிலையை உங்களுக்குத் தெரிவிக்க விரும்புகிறேன்.

ஹீரோயின் குளறுபடி:

தமிழ்த் திரையுலகில் இருந்த எந்தவொரு கதாநாயகியும் சிம்புவுடன் நடிக்க ஒத்துக் கொள்ளவில்லை. த்ரிஷா வாங்கிய அட்வான்ஸ் தொகையை திருப்பித் தந்துவிட்டார். லட்சுமி மேனனை கொச்சிக்கே நேரில் சென்று சந்தித்து கதை சொல்லி கேட்டபோதும் மறுத்துவிட்டார். கடைசியில் ஸ்ரேயா மட்டுமே சிம்புவுக்கு ஜோடியாக நடிக்க ஒப்புக் கொண்டார். ஆனால் படப்பிடிப்பு தொடங்க இருந்த நிலையில் ஸ்ரேயா சரியில்லை. அதனால் அவரை நீக்கிவிட்டு திரும்பவும் படப்பிடிப்பு நடத்தலாம் என்றார். அதனால் ஷ்ரேயாவுடன் எடுக்க இருந்த பாடல் காட்சியை கடைசிவரையிலும் எடுக்கவே முடியவில்லை. இவரால் தமன்னா, கோவை சரளா, மொட்டை ராஜேந்திரன் ஏன் 80 வயது நடிகரான நீலூவரையிலும் பாதிக்கப்பட்டவர்களே அதிகம்.

லொக்கேசன் குளறுபடி:

நாங்கள் படப்பிடிப்புக்கு வேண்டிய வசதிகளை ஏற்பாடு செய்து கொண்டிருக்கும்போது சிம்பு ஒவ்வொரு லொகேஷனையும் மாற்றிக் கொண்டேயிருந்தார். மதுரையில் ரொம்ப வெயிலா இருக்கும். மைசூர்ல போய் பாருங்க என்றார். அங்கே சென்று பார்த்தோம். திரும்பவும் மைசூர் வேண்டாம். கோவா போகலாம் என்றார். அங்கேயும் சென்றோம். பிறகு கொச்சின் என்றார். அங்கேயும் அலைந்து, திரிந்து லொகேஷன் பார்த்துவிட்டு வந்தோம். அவரிடமிருந்து பதில் வரவில்லை. நாட்கள் கடந்தன. கடைசியில் எதுவுமே செட்டாகாமல் திண்டுக்கல்தான் என்று நாங்களே முடிவு செய்தோம்.

படப்பிடிப்பு திண்டுக்கல்லில் என்றவுடன் சிம்பு அங்கே வர மறுத்தார். திண்டுக்கல்லில் ஸ்டார் ஓட்டல்களே இல்லை என்றார். பொதுவிடத்தில் நடிக்க வரமாட்டேன் என்றார். கூட்டம் அதிகமாக இருந்தால் படப்பிடிப்பை நிறுத்திவிடுவேன் என்றார். ஞாயிற்றுக்கிழமை ஷூட்டிங்குக்கு வர மாட்டேன் என்றார்.

Simbu-AAA

Simbu

இத்தனைக்கும் பின்பு மூன்று மாதங்கள் கழித்து 2016 ஜூலை 9-ம் தேதி எங்களது அன்பானவன் அசராதவன் அடங்காதவன் படப்பிடிப்பு திண்டுக்கல்லில் துவங்கியது. இரண்டாவது ஷெட்யூலுக்காக துபாய் செல்லத் திட்டமிட்டோம். கிளம்பும்போது துபாயில் வெயில் அதிகமாக இருக்குமே? என்றார். பின்பு லண்டனுக்கு போகலாம் என்றார். அதற்கும் நாங்கள் சரி என்று சொன்ன பிறகும், வேண்டுமென்றே கால தாமதம் செய்தார். மூன்றாவது ஷெட்யூல் படப்பிடிப்புக்கு எப்படியோ சம்மதிக்க வைத்த பின்னர் துபாய் வேண்டாம் என்றார். மலேசியாவை சொன்னோம். அதுவும் வேண்டாம் என்றவர் கடைசியாக சிங்கப்பூரை கை காட்டினார். இறுதியில் அதுவும் வேண்டாம் என்று சொல்லி தாய்லாந்து இறுதியானது. சிம்பு செய்த குளறுபடியினால் தாய்லாந்தை சிங்கப்பூராக காட்ட முடிவு செய்தோம். லொக்கேஷன் பார்த்த பிறகு அவருக்குக் கதாநாயகியாக பூஜா குமார், நீத்து சந்திரா, சானாகான் என்று ஆட்களை மாற்றி, மாற்றிச் சொல்வார்

கால்ஷீட் குளறுபடி:

படப்பிடிப்பு தேதியை சிம்புதான் தெர்வு செய்வார். அவரேதான் கால்ஷீட் நேரத்தையும் முடிவு செய்வார். ஆனால் அவர் மட்டும் சொன்ன கால்ஷீட் நேரத்தில் ஒரு நாளும் வந்ததில்லை. வரவும் மாட்டார். அப்படியும் வந்து நடித்தால் அன்றைய இரவிலேயே காலையில் எடுத்தக் காட்சிகளை ரஷ் போட்டு பார்த்துவிடுவார். இடையில் கபாலி படம் பார்க்கவும் ஒரு நாள் ஷூட்டிங்கையே நிறுத்திவிட்டார்.

எடை குளறுபடி:

இரண்டு மாத போராட்டத்திற்கு பிறகு சரி. வருகிறேன் என்றார். பிறகு, நான் இப்போது 90 கிலோ எடையில் இருக்கிறேன். இதைக் குறைத்துவிட்டு படப்பிடிப்பை நடத்தலாம் என்றார். ஆனால் அவர் எதையும் செய்யவில்லை. நாங்கள் வேறு வழியின்றி அதே உடம்புடன் அஸ்வின் தாத்தா லுக்கில் மூன்றாவது கதாபாத்திரத்தை சென்னையில் எடுக்கத் திட்டமிட்டோம்.

simbu

இந்தக் கேரக்டருக்கு PROSTHETIC MAKEUP அளவெல்லாம் எடுத்த பின்னர் மேக்கப் போட மூன்று மணி நேரமாகும் என்பதைத் தெரிந்து கொண்டு மேக்கப்பெல்லாம் போட மாட்டேன். வேண்டுமானால் முகத்தை மட்டும் சி.ஜி.யில் மாற்றிக் கொள்ளுங்கள் என்றார்.

ஊழியர்களை மாற்றி குளறுபடி:

மாயாஜாலில் படப்பிடிப்பு நடந்தபோதுகூட ஈ.சி.ஆரில் ரூம் எடுத்துத் தங்கினார். அதன் கணக்கு விவரங்களை எங்களது நிறுவனத்தின் நிர்வாகத் தயாரிப்பாளரான இராம.நாராயணன் கேட்டார். இந்த ஒரே காரணத்திற்காக அவரை படத்திலிருந்து நீக்கினால்தான் நான் ஷூட்டிங்கிற்கு வருவேன் என்று அடம் பிடித்தார் சிம்பு. அதனால் வேறு வழியில்லாமல் இராம.நாராயணனை நாங்கள் மாற்றினோம்.

இரண்டாம் பாக குளறுபடி:

படம் நன்றாக வந்திருக்கிறது. இதை இரண்டு பாகமாக வெளியிட்டால் நன்றாக இருக்கும். நானே சம்பளம் வாங்காமல் இரண்டாம் பாகத்தில் நடித்துத் தருகிறேன். இதற்கு நீங்கள் ஒத்துக் கொள்ள வேண்டும். இல்லையென்றால் இந்தப் படத்தை முடிக்க இன்னும் ஒன்றரை வருடங்களாகும்… என்று மிரட்டினார்.

Simbu

படம் வெளியாக வேண்டுமே என்பதற்காக நானும் வேறு வழியில்லாமல் இதற்கு சம்மதித்தேன்.

பாடல் குளறுபடி:

படத்திற்கு 5 பாடல்கள் வேண்டும் என்று ஒப்பந்தம் போடப்பட்ட நிலையில், ஒன்றரை வருடங்களாக யுவன் சங்கர் ராஜா ஒரேயொரு பாடலை மட்டுமே கொடுத்திருந்தார். இதற்கு யார் காரணம் என்பது யுவன் மற்றும் சிம்பு இருவருக்கும் மட்டுமே தெரியும். சிம்புவே பாடல் எழுதுவது, பாடுவது என்று அனைத்தும் ரிக்கார்டிங் முடிந்த பின்புதான் எனக்குத் தெரியும். இயக்குநருக்குக்கூட பாடல் பதிவு நடப்பதை அவர்கள் இருவரும் தெரிவிக்கவில்லை.

கடைசியாக மூன்றாவது கதாபாத்திரத்தில் நடிக்க சிம்பு விரும்பவில்லை. வரவும் மறுத்துவிட்டார். கட்டக் கடைசியாக இயக்குநர் சிம்புவிடம் நேரில் சென்று கதறி அழுது ஒரு மணி நேரம் மட்டும் தாருங்கள்.. எட்டே, எட்டு ஷாட்டுகள் என்று கேட்ட பின்னர் என் வீட்டிலேயே எடுத்துக் கொள்ளுங்கள் என்றார். அதன்படி எடுத்தோம். இந்த ஷூட்டிங்கிற்கே அவர் அதிகாலை  மூன்று மணிக்குத்தான் வந்தார் என்றார் பார்த்துக் கொள்ளுங்கள்.

டப்பிங் குளறுபடி:

வீட்டில் இருந்து கொண்டே வெளியில் வர மாட்டேன் என்றார். ரிலீஸ் தேதி நெருங்கிவிட்டபடியால் அவர் வீட்டு பாத்ரூமிலேயே டப்பிங் பேசினார். அவர் பேசிய சம்பளத்தை வாங்கவில்லையென்றால் எப்படி டப்பிங் பேசியிருக்க முடியும்..?

AAA-simbu

AAA Simbu

அதைக் கொண்டு வந்து 4 பிரேம்ஸ் ராஜா கிருஷ்ணனிடம் காட்டினால்.. அவரோ, இவ்வளவு மோசமான குரல் பதிவை என்னால் மிக்ஸ் செய்ய இயலாது. தயவு செய்து வேறு இடம் பார்த்துக் கொள்ளுங்கள் என்றார். இன்னும் ஐந்து நாட்களில் படம் சென்சாருக்கு அனுப்பப்பட்டாக வேண்டும் என்ற அவசர நிலையில் 75,000 ரூபாய் செலவில் VOICE MODULATION SOFTWARE வாங்கிக் கொடுத்து ஓரளவிற்கு அதனைச் சரி செய்து டப்பிங் வேலைகளை முடித்தோம்.

இப்படி பல வழிகளில் சிம்புவினால் ஏற்பட்ட இடைஞ்சல்கள், தொல்லைகள் ஆகியவற்றால் படம் இப்படி குளறுபடியாகத்தான் வெளிவந்தது. முதல் ஷோவை திரையரங்கில் பார்த்துவிட்டு மிகுந்த மனக்கஷ்டத்துடன் வெளியே வந்தபோது சிம்புவின் ரசிகர்கள் ஒரு கூட்டமாக வாசலில் நின்று என்னை மிரட்டுவது போல பார்த்தனர். இந்த அவமானத்தையெல்லாம் தாங்கிக் கொண்டுதான் இந்தப் படத்தை முடித்திருக்கிறேன்.Simbu-2

எனக்கு ஏற்பட்ட இந்தக் கதி, வேறு எந்தத் தயாரிப்பாளருக்கும் ஏற்படாமல் இருக்க வேண்டும் என்பதற்காகத்தான் இதனையெல்லாம் இப்போது வெளியில் சொல்கிறேன்..”

இவ்வாறு தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார் தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன்

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top