Tamil Cinema News | சினிமா செய்திகள்
ஆதரவு நம்மவருக்கா? தலைவருக்கா? சிம்பு பளீச் பதில்
நடிகர் சிம்புவின் அரசியல் ஆதரவு யாருக்கு என்ற கேள்விக்கு ஒரு சுவாரசியமான பதிலை தெரிவித்து இருக்கிறார்.
நடிகர் சிம்பு தற்போது ஆக்டிவ் மோடில் சில விஷயங்களில் களமிறங்கி அசத்தி வருகிறார். தமிழகத்தின் தலையாய பிரச்சனையாக இருந்த காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க பல தரப்பும் கோரிக்கை விடுத்தது. ஆனால், நடிகர் சிம்பு வைத்த கோரிக்கையோ புது விதமாக இருந்தது. கர்நாடகா மக்களிடம் தண்ணீர் தர விருப்பம் என்றால் ஒரு கிளாஸ் தண்ணீரை தமிழருக்கு கொடுத்து வீடியோ வெளியிடுங்கள் என்றார். இவர் பேச்சை நாமலே கேட்கலா? அப்புறம் எப்படி கர்நாடகாகாரன் என்ற ரீதியில் குரல்கள் எழுந்தது உண்மை தான். ஆனால், அவர் குறிப்பிட்ட நாளில் ஏகப்பட்ட வீடியோக்கள் சமூக வலைத்தளத்தில் வைரல் ஆனது. தொடர்ந்து, போராட்டத்தில் கைதாகி சிறையில் இருக்கும் மன்சூர் அலிகானுக்காக குரல் கொடுத்தது என சிம்பு தொடர்ந்து லைம் லைட்டுக்குள்ளேயே இருக்கிறார். இவருக்கு ரசிகர்கள் கூட்டம் ஏராளம் தான். அரசியலுக்கு வர நேரம் பார்த்தால் கூட பேசும் பேச்சில் அத்தனை உண்மை என்பதில் மட்டும் சந்தேகமே இல்லை.
இந்நிலையில், கலாட்டா தமிழ் இந்த வருடம் சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரை கலைஞர்களுக்கு விருது கொடுத்து சிறப்பித்தது. அதில் நடிகர் சிம்பு அவர்களுக்கு யூத் ஐகான் ஆஃப் தி இயர் விருது கொடுக்கப்பட்டது. இதை நடிகர் விக்ரம் வழங்கினார். விருது வாங்கியதும் நடிகர் சிம்பு தனது ரசிகர்களிடம், யார் அறிவுரையுமே கேட்காதீர்கள் அதான் என் அறிவுரை என தெரிவித்தார். தொடர்ந்து, அவர் தங்கை இலக்கியா அண்ணன் குறித்த பல தகவல்களை தெரிவித்தார்.
இந்த வீடியோவை கேட்டதும், தொகுப்பாளர்கள் அவர்களிடம் இலக்கியாவிற்கு என்ன சொல்ல ஆசைப்படுகிறீர்கள் என கேள்வி எழுப்பினர். அதற்கு சிம்பு, இலக்கியா தனக்கு தங்கையாக பிறக்க தான் தான் கடவுளிடம் நன்றி சொல்ல வேண்டும் என சற்று கலங்கினார். இதனால், அரங்கை கலகலப்பாக்க எண்ணிய தொகுப்பாளினி நம்மவரா? தலைவரா? சார் என்றார். அதற்கு யோசிக்காமலே தமிழன் என பதில் அளித்தார் சிம்பு.
சிம்பு சார் ஒரு டவுட்டு கமல்ஹாசன் சார் தமிழன் தானே?!! ரைட்டு நான் ஒன்னும் சொல்லப்போ!
