புதன்கிழமை, பிப்ரவரி 19, 2025

ராசியில்லாத ஹீரோ என சிம்புவை ஒதுக்கிய சன் பிக்சர்ஸ்.. சூப்பர் ஹிட் ஹீரோவுக்கு கைமாறிய படம்

நடிகர் சூர்யா நடிப்பில் பாண்டியராஜ் இயக்கத்தில் சன் பிக்சர்ஸின் பிரமாண்டமான தயாரிப்பில், உருவாகி இருக்கும் படம் தான் எதற்கும் துணிந்தவன். அடுத்தடுத்து பாடல் , டீஸர் , ப்ரோமோ என வரிசை கட்டி பல அப்டேட்களை வெளியிட்டு ரசிகர்களை தொடர் உற்சாகத்தில் வைத்து இருக்கின்றனர். அதனாலேயே இந்த படம் மிக பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. ஏற்கனவே பிப்ரவரி 4 ஆம் தேதி படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது.

ஆனால் கொரோனாக் காரணமாக படத்தின் ரிலீஸ் தள்ளி வகைப்பட்டு மார்ச் 10 ஆம் தேதி ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. இதற்கு மத்தியில் இந்த படம் குறித்து பேசிய அந்த படத்தின் இயக்குனர் பாண்டியராஜ் பல சுவாரஸ்ய தகவல்களை சொல்லி இருக்கிறார். எதற்கும் துணிந்தவன் படத்தின் போஸ்டரில் கிராமத்து கெட்டப்பில் சூர்யாவை நாம் பார்த்த உடனேயே இந்த படம் நல்லா இருக்கும் போலயே..? என்று தோண ஆரம்பித்தது.

கிராமத்து கதைக்களங்களில் சூர்யா வெளுத்து வாங்குவார் என அனைவருக்கும் தெரியும். ஆனால் எதற்கும் துணிந்தவன் கதை நேரடியாக சூர்யாவுக்காக எழுதவில்லை. வேறு ஒரு பெரிய நடிகருக்காக எழுதப்பட்ட கதை. படத்தின் தயாரிப்பாளர் கலாநிதி மாறன் இது சூர்யாவுக்குதான் சரியாக இருக்கும் என்று கூறியதால் தான் எதற்கும் துணிந்தவனாக மாறினார் என்று இயக்குனர் பாண்டியராஜ் போட்டு உடைத்து விட்டார்.

சூர்யாவுக்கு வேறு ஒரு மாஸ் கதை தன்னிடம் இருப்பதாகவும் ஆனால் அதற்கு மிக அதிக உழைப்பை போட வேண்டும் என்றும் கூறினார். அந்த கதைக்குப் பதிலாக தான் எதற்கு துணிந்தவன் சூர்யாவுக்கென அமைந்து விட்டது என கூறினார்.

அவர் சொன்னபடி  உண்மையில் இந்த கதை யாருக்காக எழுதப்பட்டது? அந்த பெரிய நடிகர் யாரா இருக்கும்..? தொடர்ந்து கம் பேக் என கூறி நிறைய படங்களை எடுத்து பல சொதப்பல்கள் செய்து இறுதியாக மாநாடு என்ற வெற்றிப்படத்தை கொடுத்து உண்மையான கம் பேக் கொடுத்த சிம்புதான் அந்த பெரிய ஹீரோவாம்.

அப்புறம் அவருக்கு ஏன் இந்த கதை செல்லவில்லை என்ற சந்தேகம் அனைவருக்கும் எழும். சிம்பு சமீபத்தில் கிராமத்து கதை களத்தில் நடித்த ஈஸ்வரன் திரைப்படத்தின் மோசமான ரிவ்யூ தான் இதற்க்கு காரணம் என்று கூறப்படுகிறது. சிம்புவுக்கு அந்த நேரத்தில் ராசி இல்லாததால் இந்த படம் சூர்யாவுக்கு கைமாறி உள்ளது. அதனால் தான் இந்த கதை நகர்ந்து சூர்யாவுக்கு சென்று விட்டதாகவும் சினிமா வட்டாரங்கள் கூறுகின்றன.

“வாய தொறந்தாலே பிரச்சனையாகும்னு, மனுஷன் அமைதியா ஆயிட்டாரூ. இப்படி புதுசா புதுசா காரணம் கண்டுபுடுச்சு அடுச்சா எங்கடா போவாரு அவரு” என ஒரு பக்கம் அவரது ரசிகர்கள் கதறி வருகின்றனர்.

Trending News