தொட்டதெல்லாம் துலங்கும் நேரம்.. குத்தாட்டம் போட வைத்த சிம்பு

தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனராக வலம் வந்த லிங்குசாமி கடைசியாக சண்டைக்கோழி 2 திரைப்படத்தை இயக்கி இருந்தார். அந்த படத்திற்கு பிறகு அவர் எந்த திரைப்படத்தையும் இயக்காமல் தற்போது நீண்ட இடைவெளிக்கு பிறகு தெலுங்கில் ஒரு திரைப்படத்தை இயக்கிக் கொண்டிருக்கிறார்.

அங்கு அவர் நடிகர் ராம் போதினேனியை வைத்து த வாரியர் என்ற திரைப்படத்தை இயக்கிக் கொண்டிருக்கிறார். இப்போதைக்கு தமிழ் வேண்டாம் என்று தெலுங்கு பக்கம் தாவி இருக்கும் லிங்குசாமி இந்த படத்தை மிகவும் பிரம்மாண்டமாகத் உருவாக்கிக் கொண்டிருக்கிறார்.

இந்தப் படத்திற்காக அவர் நடிகர் சிம்புவிடம் ஒரு உதவியை கேட்டுள்ளார். சிம்புவும் அந்த உதவியை அவருக்கு சீரும் சிறப்புமாக செய்து கொடுத்துள்ளார். அதாவது இந்த படத்தில் சிம்பு குரலில் ஒரு பாட்டு வேண்டும் என்று லிங்குசாமி மிகவும் ஆசைப்பட்டு உள்ளார்.

அதனால் சிம்புவிடம் அவர் அந்தப் பாட்டிற்கு உங்க குரல் தான் கெத்தாக இருக்கும் என்று கேட்டிருக்கிறார். சிம்புவும் அண்ணனுக்காக இது கூட செய்ய மாட்டேனா என்று அந்த பாடலை பாடி கொடுத்து அசத்தி இருக்கிறார். எதிர்பார்த்ததற்கு மேலாகவே அந்த பாடல் அற்புதமாக வந்திருக்கிறதாம்.

கிட்டத்தட்ட அனைவரையும் குத்தாட்டம் போட வைக்கும் அளவுக்கு அந்தப் பாடல் இப்பவே ஹிட் இடத்தை பிடித்துள்ளது. சிம்புவின் குரலில் அந்தப் பாடலுக்கு மிகவும் அற்புதமாக டான்ஸ் ஆடி இருக்கிறாராம் ராம் போதினேனி.

ஏற்கனவே இப்படத்தில் கீர்த்தி ஷெட்டி, ஆதி, நதியா உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்திருப்பதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாக இருக்கிறது. இந்நிலையில் சிம்புவும் ஒரு குத்துப் பாடலை பாடி இருப்பதால் ரசிகர்கள் மத்தியில் அந்த எதிர்பார்ப்பு சற்று அதிகரித்துள்ளது.

Next Story

- Advertisement -