fbpx
Connect with us

16 வருடத்திற்கு பிறகு உருவாகும் சிம்புவின் சூப்பர் ஹிட் இரண்டாம் பாகம்.. தெறிக்கவிடும் ரசிகர்கள்

Tamil Cinema News | சினிமா செய்திகள்

16 வருடத்திற்கு பிறகு உருவாகும் சிம்புவின் சூப்பர் ஹிட் இரண்டாம் பாகம்.. தெறிக்கவிடும் ரசிகர்கள்

தமிழ் சினிமாவில் வம்பு நடிகராக இருந்து தற்போது தெம்பு நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் சிம்பு.

உடல் எடை கூடியதால் சிம்புவை கிண்டலடித்த அவர்கள் தற்போது அவர் மீண்டும் ஸ்லிம் தோற்றத்துக்கு மாறியதை பார்த்து வாயடைத்துப் போய் விட்டனர்.

மேலும் தொடர்ந்து சிம்புவை வைத்து படம் எடுக்க பல தயாரிப்பாளர்கள் தொடர்ந்து அவரது கால்சீட் கேட்டு நச்சரித்து வருகிறார்களாம்.

இது ஒருபுறமிருக்க சிம்பு ஏற்கனவே நடித்த சூப்பர் ஹிட் படம் ஒன்றின் இரண்டாம் பாகத்தில் நடிக்க முடிவு செய்துள்ளாராம்.

2004 ஆம் ஆண்டு சிம்பு இரட்டை வேடத்தில் நடித்த மன்மதன் படம் எவ்வளவு பெரிய ஹிட் அடித்தது என்பது அனைவருக்கும் தெரிந்ததுதான்.

இந்நிலையில் ஈஸ்வரன் மாநாடு படங்களுக்கு பிறகு மன்மதன் 2 படத்தை தானே இயக்கி நடிக்க உள்ளாராம்.

மன்மதன் படத்தை சிம்பு தான் இயக்கினார் என அனைவரும் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

ஆனால் உண்மையில் மன்மதன் படத்தின் கதை முதல் இயக்கம் வரை இருந்தவர் முருகன் என்ற அசிஸ்டன்ட் இயக்குனர் தான் என்பது பலருக்கும் தெரியாத விஷயம்.

simbu manmathan

simbu manmathan

Continue Reading
To Top