சிம்புவின் நடிப்பில், சுசீந்திரன் இயக்கத்தில் தயாராகி இருக்கும் படம் தான் ‘ஈஸ்வரன்’. இந்த படத்தின் ஆடியோ லான்ச் நேற்று ஆல்பட் திரையரங்கில் விமர்சையாக நடைபெற்றது.
இதில் சிம்பு, சுசீந்திரன், நிதி அகர்வால், பாரதிராஜா உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டு, விழாவை சிறப்பித்தனர். அதுமட்டுமில்லாமல் சிம்புவும் மாப்பிள்ளை கெட்டப்பில் வந்து அரங்கையே அலறவிட்டார். இந்நிலையில் சிம்பு இசை வெளியீட்டில் பேசிய தகவல்கள், இணையத்தில் வைரலாகி வருகின்றன.
மேலும் சிம்பு விழாவில் பேசும்போது, ‘இந்த படம் எப்படி உருவானது, நான் எப்படி இப்படி மாறினேன்.. இதெல்லாம் எனக்கு தெரியல. கடவுளுக்கு மட்டும்தான் தெரியும். எல்லா பக்கமும் பொறாமை, போட்டி, குறை சொல்வது என நெகட்டிவ் வைப்ரேஷன் தான் இருக்கு’ என்று கூறியிருக்கிறார்.
அதோடு ‘அட்வைஸ் பண்றத எல்லாரும் நிறுத்தணும், மத்தவங்ககிட்ட அட்வைஸ் கேக்குறத நாம முதல்ல நிறுத்தணும். நான் மனதளவில் ரொம்ப கஷ்டப்பட்டேன். இதனால் என் வெயிட் அதிகமானதோட படப்பிடிப்பில் கலந்து முடியாம போச்சு’ என்று தெரிவித்திருக்கிறார் சிம்பு. அதுமட்டுமில்லாமல் இறைவன் உள்ளத்தில் இருப்பதை அறிந்து, அதை சரி செய்ததால் தான் தற்போது எல்லாமே நன்றாக நடக்கிறது என்றும், எல்லாரிடமும் அன்பு செலுத்துங்கள் என்றும் கூறியிருக்கிறார் சிம்பு.
இறுதியாக சிம்பு, ‘ரசிகர்களுக்கு ஒன்னே ஒன்னு மட்டும் சொல்லணும்னு நினைக்கிறேன், இனி பேச ஒண்ணுமே இல்ல, எல்லாமே செயல் தான். ஈஸ்வரன் படக்குழுவினருக்கு நன்றி’ என்று தெரிவித்திருக்கிறார்.
இவ்வாறு சிம்பு, ஈஸ்வரன் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசியிருக்கும் தாவல்கள் இணையத்தில் வைரலாகி வருவதோடு, சிம்புவின் ரசிகர்களால் பெருமளவில் ஷேர் செய்யப்பட்டு வருகிறது.
சிம்பு ஈஸ்வரன் பட இசை வெளியீட்டில் பேசிய வீடியோவை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்.