Tamil Cinema News | சினிமா செய்திகள்
Metoo குற்றச்சாட்டு-சிம்பு தரப்பில் இருந்து அதிரடி பதில்.!
கடந்த சில வாரங்களாக தமிழ் சினிமாவையே புரட்டி போடும் ஒரு விஷயம் Metoo தான் இதில் பல தயாரிப்பாளர்கள் முதல் இயக்குனர்கள் நடிகர்கள் என பலரும் இதில் சிக்கி கொண்டுள்ளார்கள் முதலில் பாடகி சின்மயி வைரமுத்து மீது பாலியல் புகார் ஒன்றை முன்வைத்தார் அதிலிருந்து வெடித்ததுதான் பிரச்சனை.
ஒருவர் பின் ஒருவராக வரிசையாக வைரமுத்து மீது பலர் பாலியல் புகார்களை கூறிவந்தார்கள், இதில் தியாகராஜன், அர்ஜுன் என பல பிரபலங்கள் மீதும் பாலியல் புகார்களை கூறுகிறார்கள் இந்த நிலையில் சமீபத்தில் நடிகை லேகா வாஷிங்டன், சிம்பு மீது மறைமுகமாக பாலியல் புகாரை கூறினார்..
ட்விட்டரில் கெட்டவன் என அவர் பதிவிட்டிருந்தார் அதைப் பார்த்த ரசிகர்கள் முதல் பிரபலங்கள் வரை அது சிம்புதான் என பேச ஆரம்பித்தார்கள், இதில் வெடித்தது தான் பிரச்சனை, சிம்பு மீது இப்படி கூறியதால் சிம்பு ரசிகர்களும் கோபப்பட்டார்கள் மேலும் பல ரசிகர்கள் சிம்புவை விமர்சித்து வந்தார்கள்.
சிம்புவுடன் கேட்டவன் படத்தில் லேகா வாஷிங்டன் நடித்தது குறிப்பிடத்தக்கது இதனால் கெட்டவன் என யாரையும் குறிப்பிடாமல் Metoo வில் போட்டிருந்ததால் சிம்பு என அனைவரும் கூறுவதால் சிம்பு தரப்பில் தொலைபேசி மூலம் விசாரிக்கப்பட்டது அப்போது அவர்கள் தெரிவிக்கையில்.

simbu
கெட்டவன் படப்பிடிப்பில் நூற்றுக்கணக்கான கலைஞர்கள் பணியாற்றினார்கள் அவர்களில் யாராவது இருக்கலாம் அது தயாரிப்பாளர்களோ அல்லது இயக்குனராகவும் இருக்கலாம் இதற்கும் சிம்புவிற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என அவர் தரப்பிலிருந்து கூறப்பட்டுள்ளது. மேலும் நெட்டிசன்கள் சிம்பு மீது குறை கூறுவது தவறு என தெரிவித்துள்ளார்.
