நடிகர் சிம்பு தமிழ் சினிமாவில் தனகென்ன ஒரு ரசிகர் கூட்டத்தை பெற்றுள்ளார், இந்த நிலையில் சமீபத்தில் சிம்புவின் பெயர் மிகவும் மோசமான விமர்சனத்தில் அடிப்பட்டது, ஆனால் தற்பொழுது தான் உண்டு தன் நடிப்பு உண்டு என இருக்கிறார் இவர் ஆரம்பத்தில் தன்னை ரஜினி ரசிகராக அடையாளம் காட்டிகொண்டார் சிம்பு.

மேலும் மன்மதன் படத்திற்கு பிறகு அஜித்தின் ரசிகனாக தன்னை பிரதிபலித்துக்கொண்டார் அதன் பின்பு வெளியான அனைத்து படத்திலும் தான் ஒரு அஜித் ரசிகர் என்பதை அடிகடி காட்டிகொல்வார்,வெளியான அனைத்து படத்திலும் அஜித்தின் ரெபெரன்ஸ் ஒரு காட்சியிலாவது இருக்கும்.

இந்த நிலையில் திடிரென சிம்பு இனிமேல் அஜித்தின் ரெபரன்ஸ் என் படத்தில் இருக்காது என தெரிவித்துள்ளார் ஒரு பேட்டியில், மேலும் ஒரு மேடை விழாவில் இது குறித்து கேள்வி கேட்கப்பட்டது, ஏன் அஜித்தின் ரெபரன்ஸ் இனி உங்கள் படத்தில் இருக்காது சொன்னீர்கள், உங்களுக்கும் அவருக்கும் ஏதேனும் பிரச்சனையா என கேட்டார்கள்.

இதற்க்கு பதில் அளித்த சிம்பு அஜித் மிகவும் நல்ல மனிதர் அவர் இந்த இடத்தை அடைய மிகவும் கடினபட்டுள்ளார்,அவர் சொந்த உழைப்பால் தான் இவ்வளவு உயரத்திற்கு வந்துள்ளார் நிலைமை இப்படி இருக்க அவரை வைத்து நான் வளர்கிறேன் என்றால் எனக்கு கொஞ்சம் வருத்தம் தான் அதனால் தான் இந்த முடிவு எடுத்துள்ளேன் என கூறினார்.

மேலும் அப்படி சொன்ன விஷயத்தை கூட ஒரு சில தீய சக்திகள் வேறு மாதிரி திசை திருப்பினார்கள், அதே நேரத்தில் உண்மையான அஜித் ரசிகன் என்னை பற்றி புரிஞ்சுகிட்டு இருக்காங்க உருக்கமாக என கூறியுள்ளார்.