சனிக்கிழமை, பிப்ரவரி 15, 2025

பயத்தை காட்டிய தயாரிப்பாளர்.. ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு தலைதெறிக்க ஓடி வந்த சிம்பு

கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் சிம்பு நடித்து வரும் படம் வெந்து தணிந்தது காடு. இப்படத்தை வேல்ஸ் பிலிம்ஸ் சார்பில் ஐசரி கணேஷ் தயாரிக்கிறார். இப்படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசையமைத்துள்ளார்.

வெந்து தணிந்தது காடு படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. இப்படத்தில் முத்து என்ற வித்தியாசமான கதாபாத்திரத்தில் சிம்பு நடித்துள்ளதாக கூறப்படுகிறது. இப்படத்தில் சிம்புக்கு ஜோடியாக சித்தி இத்னானி நடிக்கிறார்.

இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு திருச்செந்தூரில் நடைபெற்றது. இதைதொடர்ந்து சென்னையில் பல்வேறு இடங்களில் படப்பிடிப்பு நடந்துள்ளது. அதன் பிறகு மும்பையில் ஷூட்டிங் நடைபெற்றது. மீண்டும் மும்பையில் சில காட்சிகள் படமாக்க உள்ளதாம்.

வெந்து தணிந்தது காடு படத்தின் ஷூட்டிங்கை விரைந்து முடித்து இந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் வெளியிட ஐசரி கணேஷ் முடிவு செய்துள்ளாராம். இதனால் படக்குழு மும்பையில் மீண்டும் ஷூட்டிங் தொடங்க தயாராக உள்ளார்கள்.

ஆனால் அங்கு கொரோனா பரவல் உச்சத்தில் இருப்பதால் இப்போது மும்பை சென்று படப்பிடிப்பு எடுக்க வேண்டாம் என சிம்பு கூறியுள்ளார். ஆனால் வெந்து தணிந்தது காடு படக்குழு உடனடியாக படத்தை முடிக்க வேண்டும் என்று கண்டிஷன் போடுவது போல் பயத்தை கிளப்பியுள்ளனர்.

இப்போதே படப்பிடிப்பு நடத்த வேண்டும் என சிம்புவிடம் படக்குழு வலுக்கட்டாயமாக கூறியுள்ளார்கள். இதனால் சிம்பு தலைதெறிக்க மும்பைக்கு ஓடியுள்ளார். இப்போதுதான் மாநாடு வெற்றியால் சிம்பு கம்பேக் கொடுத்த நிலையில் எந்த பிரச்சனையிலும் சிக்கக் கூடாது, நாம் இப்போது முடியாது என்று சொன்னால் நமது பெயரை கெடுத்து விடுவார்கள் என்ற பயத்தில் ஓகே சொல்லிவிட்டாராம்.

Trending News