Tamil Cinema News | சினிமா செய்திகள்
மிஸ்டர் தனுஷ் நீங்கள் எனக்கு எதிரிதான்.! வடசென்னைக்கு வாழ்த்து கூறிய சிம்பு
இயக்குனர் வெற்றிமாறனின் பதினைந்து வருட கனவு, தனுஷின் 3 வருட உழைப்பில் இன்று வெளியாகி இருக்கும் திரைப்படம் வட சென்னை இப்படி பல விஷயங்களை இந்த படத்தில் கூறலாம். இன்று சென்னையில் மட்டும் நூற்றுக்கணக்கான காட்சிகள் திரையிடப்பட்டு பரபரப்பாக ஓடிக் கொண்டிருக்கிறது வடசென்னை.
தனுஷ் ரசிகர்கள் வழக்கம்போல் இந்த படத்தை ஆட்டம் பாட்டம் கொண்டாட்டத்துடன் படத்தை வரவேர்த்தார்கள் இந்த நேரத்தில் வட சென்னை படத்தில் நடிக்க இருந்த சிம்பு தனுஷிற்கு வாழ்த்து கூறியுள்ளார் கூறியுள்ளார்.
திரையில் தான் எங்களுக்கு போட்டி சமூக வலைதளங்களில் இல்லை எனக்கூறி வடசென்னை போல் நல்ல படங்களை நாம் ஆதரிக்க வேண்டும் வடசென்னை படத்தில் நடித்த எனது நண்பர் தனுஷ் வெற்றிமாறன் மற்றும் படக்குழுவினருக்கு எனது சார்பாகவும் எனது பென்ஸ் சார்பாகவும் மனமார்ந்த வாழ்த்துக்கள் என தெரிவித்துள்ளார்.
ஒரு நல்ல தரமான படத்தை என்றுமே ஆதரிக்க வேண்டும் என்று எனது ரசிகர்களிடம் கேட்டுக் கொள்கிறேன்’என்று தனது வாழ்த்து செய்தியை ட்விட்டர் மூலம் சிம்பு குறிப்பிட்டுள்ளார்.
