simbu-beep-songகடந்த ஆண்டு இறுதியில் வெளியான சிம்புவின் பீப் பாடல் விவகாரம் நாடெங்கும் பேரதிர்வை ஏற்படுத்தியது. மேலும் சிம்பு மீது பல்வேறு பகுதிகளில் இருந்தும் புகார்கள் எழுந்த வண்ணம் இருந்தது. இது சம்பந்தமாக நடிகர் சிம்பு நேற்று காலை 10 மணியளவில் கோவை காட்டூர் காவல் நிலையத்தில் நடிகர் சிம்பு தனது வக்கீல்களுடன் ஆஜரானார்.

பின்னர் வெளியே வந்து பத்திரிகையாளர்களிடம் பேசிய அவர், ” காவல்துறையினர் கேட்ட கேள்விகளுக்கு முழுமையாகப் பதில் கூறியிருக்கிறேன். என் மேல் எந்த ஒரு தவறும் இல்லை. விசாரணைக்கு முழு ஒத்துழைப்புக் கொடுத்துள்ளேன். அதற்கு மேல் ஆண்டவன் பார்த்துக்கொள்வான்” என கூறினார்.

இந்நிலையில் விசாரணையின் போது காவல்துறையினரிடம் சிம்பு கூறியது என்ன என்பது குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது. தான் காதல் தோல்வியின் போது இப்பாடலை உருவாக்கியதாகவும் இதற்கும் அனிருத்துக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை எனவும் சிம்பு கூறினாராம். மேலும் இப்பாடலை பதிவேற்றம் செய்தது யார் என்பது குறித்த தகவலும் தனக்கு தெரியாது என அவர் கூறியுள்ளார்.