fbpx
Connect with us

Cinemapettai

சிம்பு கோரிக்கையை தள்ளி வைத்த நீதிமன்றம்

Celebrities | பிரபலங்கள்

சிம்பு கோரிக்கையை தள்ளி வைத்த நீதிமன்றம்

simbu-STRபீப் சாங் விவகாரத்தால் சிம்பு மீது தமிழ்நாடு முழுவதும் வழக்குகள் போடப்பட்டுள்ளது. அதில் ஒன்று கோவை ரேஸ்கோர்ஸ் போலீஸ் நிலையம் பதிவு செய்த வழக்கு. முதல் வழக்கும் இதுதான். சிம்பு வருகிற 19ந் தேதி ஆஜராக வேண்டும் என்று இரண்டாவது சம்மனை கோவை போலீஸ் அனுப்பி உள்ளது.

இந்த வழக்கை தள்ளுபடி செய்து ஆஜராக அனுப்பி உள்ள சம்மனை ரத்து செய்யவும் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் சிம்பு மனு தாக்கல் செய்தார். இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தது. “ஒரே சம்பவத்துக்கு பல வழக்குள் போடப்பட்டுள்ளது. அதனால் இதனை ரத்து செய்ய வேண்டும்” என்ற சிம்பு தரப்பு வழக்கறிஞர் வாதிட்டார்.

“சிம்புவுக்கு சம்மன் அனுப்பியும் அவர் இதுவரை ஆஜராகாமல் கால அவகாசம் கேட்டுக் கொண்டே இருக்கிறார். அதனால் ரத்து செய்யக்கூடாது” என்று அரசு தரப்பு வழக்கறிஞரும் வாதிட்டனர். வாதங்களை கேட்ட நீதிபதி வழக்கை வருகிற 21ந் தேதிக்கு தள்ளி வைத்தார். அதற்குள் கோவை போலீசர் இதுகுறித்து விளக்கம் அளிக்கவும் உத்தரவிட்டார்

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top