Tamil Cinema News | சினிமா செய்திகள்
சிம்பு நடித்த ரீமேக் படங்கள்.. எது வெற்றி எது தோல்வி
நடிகர் சிம்பு என்பதைவிட வம்பு என்பதை விட விரல் நடிகர் என்றால் எல்லோருக்கும் தெரியும். அதுமட்டுமில்லாமல் எஸ்டிஆர் என்றால் எல்லோருக்கும் தெரியும் சிலம்பரசன் என்றாலும் எல்லோருக்கும் தெரியும்.
இப்படி சிம்புவுக்கு பல பெயர்கள் உண்டு. தமிழ்சினிமாவில் அவர் வேறு மொழிகளில் வெற்றி அடைந்து தமிழில் ரீமேக் செய்த சில படங்களை பார்ப்போம். சிம்பு ஆரம்பத்தில் தம் என்னும் ரீமேக் படத்தில் நடித்தார். இது தெலுங்கு ரீமேக் படமாகும். அடுத்ததாக குத்து என்னும் தெலுங்கு படத்தை ரீமேக் செய்தார். தெலுங்கில் தம்மு என்ற படம்தான் குத்து என்று ரீமேக் செய்யப்பட்டது. தம், குத்து இரண்டும் தோல்வி அடைந்தன.
அடுத்ததாக சரவணா இந்த படம் தெலுங்கில் மாபெரும் வெற்றியடைந்த பத்ரா படத்தின் ரீமேக் அடுத்ததாக வானம் திரைப்படத்தை ரீமேக் செய்தார். இது தெலுங்கில் மாபெரும் வெற்றியடைந்த படத்தின் ரீமேக். இவை இரண்டும் சுமாராக ஓடியது.
அடுத்ததாக ஒஸ்தி என்னும் படத்தை ரீமேக் செய்தார் இந்தியில் மாபெரும் வெற்றியடைந்த சல்மான்கான் நடித்த தபாங் படத்தின் ரீமேக். அடுத்ததாக வந்தா ராஜாவா தான் வருவேன் என்னும் படத்தை ரீமேக் செய்தார். இந்தப் படம் தெலுங்கில் அத்தாரின்டிகி தாரேதி என்னும் படத்தின் ரீமேக் ஆகும்.இவை இரண்டும் பிரம்மாண்டமான தோல்வி படங்கள்.
சிம்பு அவர்கள் ரீமேக் செய்த ஒரு படம் கூட பெரிய அளவில் ஓடவில்லை. அனைத்து படங்களும் தோல்வியை சந்தித்துள்ளது.
