Tamil Cinema News | சினிமா செய்திகள்
சிம்பு அசின் நடிப்பதாக இருந்த படம்.! பல வருடம் கழித்து ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்ட சிம்பு

தமிழ் சினிமாவில் லிட்டில் சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படுபவர் சிம்பு. டி ராஜேந்திரன் மகன் என்பது அனைவருக்கும் தெரியும். சிம்பு மீது இயக்குனரும் தயாரிப்பாளரும் பல்வேறு குற்றச்சாட்டுகளை வைத்துள்ளனர். ஆனால் அதையெல்லாம் கண்டுகொள்ளாமல் நடிகர் சிம்பு படத்தில் நடித்து வருகிறார். வெங்கட் பிரபு இயக்கத்தில் மாநாடு திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
சிம்பு நடிப்பதாக இருந்து கைவிடப்பட்ட படங்கள் ஏராளமாக உள்ளன. உதாரணத்திற்கு கெட்டவன் போன்ற படங்கள் உள்ளன. தற்போது சிம்பு அவரது சமூக வலைதள பக்கத்தில் சிம்பு, அசின் இணைந்து நடிப்பதாக இருந்த படத்தின் பர்ஸ்ட் லுக்கை வெளியிட்டுள்ளார்.
மேலும் இந்த படத்தை எஸ் ஜே சூர்யா இயக்குவதாக இருந்தார் ஆனால் சில காரணங்களால் இப்படம் கைவிடப்பட்டதாகவும் இப்படத்திற்காக எடுக்கப்பட்ட புகைப்படம் தான் என அதில் பதிவிட்டுள்ளார்.
1.simbu

simbu
