நடிகர் சிம்பு மணிரத்தினத்தின் படத்தில் நடித்து முடித்துவிட்டு தற்பொழுது வெங்கட் பிரபு படத்தில் நடிப்பதற்கு கமிட் ஆகியுள்ளார் மேலும் படத்திற்கு மாநாடு என டைட்டில் வைத்துள்ளார்கள், இந்த படத்தை சுரேஷ் காமாட்சி தயாரிக்க இருக்கிறார் இந்த படத்தின் படபிடிப்பு விரைவில் தொடங்க இருக்கிறது.

இந்த னியாளியில் சிம்பு ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார், அந்த வீடியோவில் சிம்பு மாநாடு படத்தை பற்றி கொஞ்சம் பேசி பகிர்ந்துள்ளார் மேலும் சினிமா துறையில் அடிக்கடி ஏதாவது புகார் எழுந்து கொண்டே இருக்கிறது ஏன் சமீபத்தில் கூட சர்க்கார் படத்தில் புகைபிடிப்பது போல் இருக்கும் போஸ்டருக்கு பெரிதாக எதிர்ப்பு வந்தது இது குறித்து ஏதாவது கருத்து கூறினால் அது பெரிய பிரச்சனையாக மாறிவிடும் என கூறினார்.

மேலும் அவர் கூறியதாவது அன்புமணி அங்கிள் சினிமா குறித்து கேள்வி கேட்க்க ஆசைபடும் கேள்விக்கு நேரடியாக விவாத மேடையில் பேசுவதற்கு தயார் நீங்கள் ரெடி என்றால் எங்கே எந்த நேரம் என தெரிவிங்கள் நான் சினிமா பிரதிநிதியாக கலந்துகொள்கிறேன் இது தான் இந்த பிரச்னைக்கு தீர்வாக இருக்கும் என கூறியுள்ளார்.