Tamil Cinema News | சினிமா செய்திகள்
சிம்பு நடிக்க வேண்டிய படத்தில் ரஜினி நடிக்கிறார்.. இந்த கதையை கோட்டை விட்டாரே என ரசிகர்கள் புலம்பல்
மாநாடு படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. படப்பிடிப்பின் போது எடுத்த புகைப்படங்களை வெளியிட்டு சிம்பு தற்போது தெளிவாக உள்ளார் என்பதை அவ்வப்போது தயாரிப்பாளர் உறுதி செய்துக் கொண்டிருக்கிறார்.
இந்த நிலையில் கமலஹாசன் தயாரிப்பில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்க இருப்பதாக செய்திகள் வெளிவந்தது. இதற்காக லோகேஷ் கனகராஜிடம் கதை கேட்டு கிட்டத்தட்ட முடிவு செய்யப்பட்டிருந்தது. இந்த படத்தின் பூஜை மார்ச் மாதத் தொடக்கத்திலேயே போட்டிருக்க வேண்டும் ஆனால் தற்போது வரை எந்த ஒரு செய்தியும் வெளியாகவில்லை.
இதில் தலை சுற்றி போன செய்தி என்னவென்றால் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கமலுடன் இணைவதற்கு முன்னதாக சிம்புவுடன் சேர்ந்து தயாரிக்க உள்ளதாக இருந்தாராம். ஆனால் ரஜினிகாந்த் உள்ளே வந்ததால் தற்போது சிம்பு வெளியேற்றப்பட்டு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமலஹாசன் தயாரிப்பில் ரஜினிகாந்த் நடிக்க உள்ளாராம்.
கதை கிட்டத்தட்ட ஒன்றுதான் ஆனால் தற்போது ரஜினிகாந்த் நடிக்க இருப்பதால் கதையில் சில மாற்றங்களை செய்து லோகேஷ் கனகராஜ் தனது அடுத்த படத்தையும் உறுதி செய்துவிட்டாராம். இந்த படமும் கைதி படம் போல் விறுவிறுப்பாக இருக்குமாம். தனக்கென்று ஒரு மார்க்கெட்டை பிடித்து வரும் சிம்பு இந்த படத்தின் கதையை கோட்டை விட்டாரோ என்று ரசிகர்கள் புலம்பி வருகின்றனர்.
சிம்புவிற்கு அடுத்தடுத்து 12 இயக்குனர்களிடம் கதை கேட்டு சிலவற்றை அதில் உறுதி செய்து உள்ளதாக கோடம்பாக்க வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. கமலஹாசன் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கேட்ட சம்பளத்தை கொடுக்க முடியாத சூழ்நிலையில் சன்பிக்சர்ஸ் இதனுடன் இணைந்து தயாரிக்க உள்ளது குறிப்பிடத்தக்கது. ஆனால் இதுபற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் வரை ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்க வேண்டும்.
