Tamil Cinema News | சினிமா செய்திகள்
லவ் பிரேக்கப் பற்றி கிக்கான தகவல்களை வெளியிட்ட சிம்பு.. நயன் மட்டும் இல்லையாம், லிஸ்ட் ரொம்ப பெருசா போகுது!
சினிமா துறையில் ஜோடியாக நடிக்கும் நடிகர், நடிகைகள் காதல் வசப்படுவதும் பின்னர் பிரேக்கப் செய்து கொள்வதும் ஒரு வழக்கம். இதில் சிலர் விதிவிலக்காக காதலித்தவரையே மணம் முடித்துக் கொள்வதும் உண்டு.
அந்த வகையில் சில காலங்களுக்கு முன்பு பிரபலமாக பேசப்பட்ட காதல் ஜோடி தான் சிம்பு- நயன் ஜோடி. இருவரும் சில காரணங்களால் பிரேக் அப் செய்து கொண்டனர் என்பது நாம் அறிந்ததே.
ஆனால் தற்போது சிம்பு தன்னுடைய காதல் முறிவை பற்றி கூறியிருக்கும் விஷயம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
அதாவது ‘வல்லவன்’ படத்தில் இணைந்து நடித்ததன் மூலம் காதலிக்க தொடங்கியவர்தான் நயன்தாராவும் சிம்புவும். ஆனால் இருவரும் சில கருத்து வேறுபாட்டின் காரணமாக பிரிந்துவிட்டனர்.
இந்த நிலையில் நயன்தாராவுடன் தனக்கு ஏற்பட்ட காதல் முறிவை பற்றி சிம்பு சில ஆண்டுகளுக்கு முன்பு ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார். அந்தச் செய்தி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
அதாவது சிம்பு அந்த பேட்டியில், ‘ரெண்டு பேரும் காதலிச்சோம். ஆனால் சூழ்நிலை காரணமாக பிரிஞ்சுட்டோம். நான் நயன்தாராவை மட்டுமல்ல.அதற்கு முன் பல பேரை காதலித்து இருக்கிறேன்’ என்று கூறியுள்ளார்.
மேலும் இந்த செய்தி தற்போது இணையத்தில் பரவி வருகிறது.

simbu-nayan-cinemapettai
