Connect with us
Cinemapettai

Cinemapettai

Tamil Cinema News | சினிமா செய்திகள்

கோலிவுட் நழுவவிட்ட சிம்புவை தூக்கி பிடித்த கன்னட சினிமா..!

கோலிவுட்டில் சரியான வாய்ப்புகள் இல்லாமல் இருக்கும் சிம்புவிற்கு சிகப்பு கம்பளம் விரித்து இருக்கிறது கன்னட திரையுலகம்.

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான விஜய டி. ராஜேந்தரின் மூத்த மகன் சிலம்பரசன். குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான சிம்பு பல வெற்றி படங்களில் நடித்து புகழ் கண்டவர். லிட்டில் சூப்பர்ஸ்டார் என ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்படுபவர். நடிகராக மட்டுமல்லாமல் இயக்குனர், பாடகர் என பல அவதாரம் எடுத்திருக்கிறார். வெற்றி நாயகனாக வந்த சிம்புவிற்கு சமீபகாலமாக வாய்ப்புகள் சரிவர அமையவில்லை. பல சர்ச்சைகளை தொடர்ந்து சந்தித்து வரும் சிலம்பரசன், தன்னம்பிக்கை என்ற ஒற்றை வார்த்தையால் அனைத்தையுமே ஊதி தள்ளிவிட்டு நிற்கிறார். சமீபத்தில், நண்பன் சந்தானத்தின் சக்கை போடு போடு ராஜா படத்தில் இசையமைப்பாளராக அறிமுகமாகினார். அதை தொடர்ந்து, ஓவியா நடிப்பில் 90 எம்.எல் படத்திலும் இசையமைத்து வருகிறார்.

காவிரி மேலாண்மை பிரச்சனையில் நடிகர் சங்கம் இருந்த மௌன போராட்டத்திற்கு பிறகு மனம் திறந்தார் சிம்பு. தனக்கு இந்த போராட்டத்தில் எல்லாம் நம்பிக்கை இல்லை. அரசியல் தலைவர்களால் தான் பிரச்சனை. தமிழகத்திற்கு தண்ணீர் கொடுக்க விரும்பும் கர்நாடக மக்கள் ஒரு டம்ளர் தண்ணீரை தமிழருக்கு கொடுத்து வீடியோ எடுத்து வெளியிடுங்கள் என கோரிக்கை விடுத்தார். இதெல்லாம் நடக்குற கதையா? பெரிய பெரிய கட்சிகளே ஒன்றும் செய்ய முடியாமல் தவிக்கிறது. இவர் என்னடானா அசால்ட்டா சொல்லாறாரே என்பது தான் பலரின் மைண்ட் வாய்ஸாக இருந்தது.

ஆனால், அவர் குறிப்பிட்ட அந்தாளும் வந்தது. அவரின் கோரிக்கையை ஏற்ற கர்நாடக மக்கள் வீடியோவை வெளியிட்டனர். இது பலருக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. இவரின் இந்த வித்தியாச அணுகுமுறைக்கு பாராட்டுகளும் கிடைத்தது.

இந்நிலையில், கன்னட சினிமாவில் இருவுடெல்லா பிட்டு என்ற படத்திற்காக ஒரு பாடலை சிம்பு பாடியுள்ளார். ஏற்கனவே, கர்நாடக மக்களிடம் நாயகனாக மாறி இருக்கும் சிம்பு, இப்பாடலால் மேலும் பிடித்தவராகி விடுவார் என்பது குறிப்பிடத்தக்கது. இது கோலிவுட் மக்களை பெரும் மகிழ்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top